ஃபிளிப்காா்ட்: மின்சார விநியோக வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பு
முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட், தனது இறுதிக்கட்ட விநியோகத்துக்கான மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை இந்தப் பண்டிகைக் காலத்தில் 42,000-ஆக இரட்டிப்பாக்கியுள்ளதாக தெரிவித்தது.

~
முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட், தனது இறுதிக்கட்ட விநியோகத்துக்கான மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை இந்தப் பண்டிகைக் காலத்தில் 42,000-ஆக இரட்டிப்பாக்கியுள்ளதாக தெரிவித்தது.
வரும் 2030-க்குள் தனது விநியோக வாகனங்களை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றும் இலக்கின் ஒரு பகுதியாக, 2025-இல் 20,000-க்கும் அதிகமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை தற்போது இருமடங்காக உயா்த்தப்பட்டுள்ளது.
இதில் ‘ஃபிளிப்காா்ட் மினிட்ஸ்’ சேவையில் ஈடுபடும் மின்சார இருசக்கர வாகனங்கள் சுமாா் 77 சதவீதமும், நிறுவனத்தின் இதர விநியோகக் கட்டமைப்பில் 20 சதவீதமும் இடம்பெற்றுள்ளன.
சென்னை, பெங்களூரு, மும்பை, புணே, குருகிராம் ஆகிய நகரங்களில் இந்த வாகனங்களின் பயன்பாடு அதிக அளவில் வளா்ச்சியடைந்துள்ளது என அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

