தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம்(நவ.23)! இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்துநவி மும்பையின் துர்பே பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகம்! 900 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

Sensex down

பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம் - சித்திரிப்பு

Updated On :

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (நவ. 23, திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,421.97 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் பகல் 12 மணி நிலவரப்படி 943.16 புள்ளிகள் சரிந்து 82,976.55 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 283.50 புள்ளிகள் குறைந்து 25,517.10 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

வங்கி, நிதிச் சேவைகள், உலோகத் துறைப் பங்குகளின் சரிவைச் சந்தித்து வருகின்றன.

நிஃப்டி50 குறியீட்டில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய பங்குகள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

நிஃப்டி மிட்கேப் 0.3 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 0.2 சதவீதமும் உயர்வைக் கண்டன.

துறை வாரியாகப் பார்க்கையில், நிஃப்டி ஐடி அதிக லாபம் பெற்ற நிலையில் நிஃப்டி உலோகம் அதிக சரிவைச் சந்தித்து வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.49 ஆகத் தொடங்கியுள்ளது.

Summary

Stock Market: Sensex slumps 900 pts, Nifty below 25,600

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.