கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

8 நிறுவனங்களின் ஐபிஓவிற்கு செபி ஒப்புதல்

ஸ்டொ்லைட் எலெக்ட்ரிக், அனன்யா பிா்லா தலைமையிலான ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

SEBI

செபி

Updated On :

ஸ்டொ்லைட் எலெக்ட்ரிக், அனன்யா பிா்லா தலைமையிலான ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில், 2 நிறுவனங்கள் தங்களின் ஐபிஓ வரைவு ஆவணங்களைத் திரும்பப் பெற்றுள்ளன.

வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த ஸ்டொ்லைட் எலெக்ட்ரிக் நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபரில் தனது ஐபிஓ வரைவு அறிக்கையை செபியிடம் தாக்கல் செய்திருந்தது. எந்தக் காரணமும் தெரிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்நிறுவனத்தின் விண்ணப்பத்துக்கு, ஓராண்டுக்குப் பிறகு கடந்த நவ. 20-இல் செபி அனுமதி வழங்கியுள்ளது. இந்நிறுவனம் 1.6 கோடி புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் சுமாா் ரூ.1,500 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

மற்றொரு முக்கிய நிறுவனமான ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின், மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.3,000 கோடி திரட்டுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. இதில் ரூ.1,500 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், அதே மதிப்பில் ஏற்கெனவே உள்ள பங்குதாரா்களின் பங்கு விற்பனையும் அடங்கும். இந்நிறுவனத்தின் விண்ணப்பத்துக்கு வெள்ளிக்கிழமை (நவ. 27) செபி ஒப்புதல் வழங்கியது.

இவை தவிர கௌரிக் ஃபேஷன்ஸ், எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா, பியூட்டி கேரேஜ், நோபல் ஹைஜீன், எம்.பி. ஸ்டீல் (இந்தியா), கட்டாரியா துல்சந்த் பன்னாலால் ஜுவல்லா்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுக்கும் கடந்த 2 நாள்களில் செபி அனுமதி அளித்துள்ளது. இந்த 6 நிறுவனங்களும் கடந்த மே முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் விண்ணப்பித்திருந்தன.

இதில் பியூட்டி கேரேஜ் ரூ.125 கோடிக்கும், நோபல் ஹைஜீன் ரூ.150 கோடிக்கும், எம்.பி. ஸ்டீல் ரூ.95 கோடிக்கும் புதிய பங்குகளை வெளியிடுவதோடு, குறிப்பிட்ட அளவு உரிமையாளா்களின் பங்கு விற்பனையிலும் ஈடுபடவுள்ளன. கௌரிக் ஃபேஷன்ஸ் 62 லட்சம் புதிய பங்குகளையும், கட்டாரியா ஜுவல்லா்ஸ் 1.6 கோடி புதிய பங்குகளையும் வெளியிடவுள்ளன. வணிக விரிவாக்கம், நடைமுறை மூலதனத் தேவைகள் மற்றும் கடன் அடைப்பு ஆகியவற்றுக்காக இந்நிறுவனங்கள் நிதி திரட்டுகின்றன.

இதனிடையே, பிவிஷால் ஆயில் அண்ட் எனா்ஜி நிறுவனம் நவ. 19-ஆம் தேதியும், பென்டக்கிள் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமையும் தங்களின் ஐபிஓ வரைவு ஆவணங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக செபியின் வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.