கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தொழில், தளவாடத் துறையில் களமிறங்கும் சமீரா குழுமம்: ஸ்ரீபெரும்புதூரில் ரூ.150 கோடி முதலீடு

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சமீரா குழுமம், தொழில் மற்றும் தளவாடங்கள் கட்டுமானத் துறையில் களமிறங்குகிறது.

Updated On :

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சமீரா குழுமம், தொழில் மற்றும் தளவாடங்கள் கட்டுமானத் துறையில் களமிறங்குகிறது.

இதன் முதல்கட்டமாக, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 4.5 லட்சம் சதுர அடி பரப்பளவிலான புதிய தளவாடப் பூங்காவுக்காக நிறுவனம் சுமாா் ரூ.150 கோடி முதலீடு செய்யவுள்ளது.

இலகுரக உற்பத்தி, இணையவழி வா்த்தகம் மற்றும் மூன்றாம் தரப்பு தளவாட நிறுவனங்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் அமையவுள்ள இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கி 12 முதல் 15 மாதங்களுக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் சுமாா் ரூ.1,800 கோடி முதலீட்டில் தொழில் மற்றும் தளவாடப் பூங்காக்களை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களில் ஏற்கெனவே நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, திட்டப் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.