மீளுமா பங்குச்சந்தை? சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவு! ரியல் எஸ்டேட் மட்டும் லாபம்!
இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை வீழ்ச்சி... - ANI
கடந்த 2 நாள்கள் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்த நிலையில் இன்றும் (அக். 22) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,343.33 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணி நிலவரப்படி 202.76 புள்ளிகள் சரிந்து 73,506.93 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 98.10 புள்ளிகள் குறைந்து 22,713.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன், மஹிந்திரா & மஹிந்திரா, நெஸ்லே இந்தியா ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாக உள்ளன.
நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 1.04 சதவீதம், 0.91 சதவீதம் சரிந்தன.
துறைவாரியாக, நிஃப்டி கெமிக்கல், ஆட்டோ, மெட்டல் ஆகியவை மோசமாகச் செயல்பட்ட நிலையில், நிஃப்டி ரியல் எஸ்டேட் பங்குகள் மட்டும் லாபமடைந்து வருகின்றன.
Summary
Stock Market: Sensex stuck in range, Nifty near 22,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


