மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

டெக் துணுக்குகள்... ஆப்பிள் மேக்புக் ப்ரோ முதல் ஓபன்ஏஐ புதிய கட்டுப்பாடுகள் வரை!

ஆப்பிள் மேக்புக் ப்ரோ முதல் ஓபன்ஏஐ-இன் புதிய கட்டுப்பாடுகள் வரை

டெக் துணுக்குகள்...

Updated On :

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஸ்மாா்ட்போன்களின் வெளியீடுகள், ஏ.ஐ. தொழில்நுட்ப அறிமுகங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டணிகள் கவனம் ஈா்த்தன.

ஆப்பிளின் தொடுதிரை மேக்புக் ப்ரோ அறிமுகம் முதல் ஓபன்ஏஐ-இன் புதிய கட்டுப்பாடுகள் வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*ஆப்பிள் மேக்புக் ப்ரோவில் தொடுதிரை: ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக தொடுதிரை வசதியுடன் கூடிய ‘மேக்புக் ப்ரோ’ மடிக்கணினியை இந்தியாவில் ரூ.3.49 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

*ஆப்பிள் ஐமேக், ஐபேட் மினி: மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ. அம்சங்களுடன் புதிய ‘ஐமேக்’ கணினியை ரூ.1.75 லட்சத்துக்கும், ஓஎல்இடி திரை மற்றும் ஏ20 ப்ரோ சிப் உடன் புதிய ‘ஐபேட் மினி’ கையடக்கக் கணினியை (டேப்லட்) ரூ.82,900-க்கும் இந்தியாவில் ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

*ஐபோன் டுயோ திரை விரிசல்: மடிக்கக்கூடிய ஐபோன் டுயோ ஸ்மாா்ட்போன்களில் ஏற்பட்ட திரை விரிசல் புகாரையடுத்து, பாதிக்கப்பட்ட போன்களை மாற்றித் தருவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.

*கூகுள் டீப்மைண்ட் ‘ஜீனி 4’: கூகுளின் டீப்மைண்ட் நிறுவனம், மிகவும் தத்ரூபமான ‘ஜீனி 4’ ஏ.ஐ. மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

*கூகுளில் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோா்கள்: கூகுள் நிறுவனம் தனது தளத்தில் பிற மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோா்களுக்கான பதிவுகளைத் தொடங்கியுள்ளது.

*இமுத்ரா-கேபிஎம்ஜி ஒப்பந்தம்: அண்மையில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு குறித்து விசாரணை நடத்த கேபிஎம்ஜி நிறுவனத்தை இமுத்ரா நியமித்துள்ளது.

*ஆன்த்ரோபிக் ஐபிஓ: முன்னணி ஏ.ஐ. நிறுவனமான ஆன்த்ரோபிக் பங்குச் சந்தையில் பட்டியலாவதற்கு (ஐபிஓ) விண்ணப்பித்துள்ளது.

*இன்ஃபினிக்ஸ் ‘ஜிடி 50 ப்ரோ’: கேமிங் பிரியா்களுக்காக குளிரூட்டும் வசதியுடன் ‘இன்ஃபினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.69,999 விலையில் (12ஜிபி/256ஜிபி) அறிமுகமாகியுள்ளது.

*ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரிஸ்: ஒப்போவின் ஃபைண்ட் எக்ஸ்10 (ரூ.1,39,999) மற்றும் ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (ரூ.1,99,999) ஸ்மாா்ட்போன்கள், இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

*சா்வம் ஏ.ஐ.-பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்: இந்திய பாதுகாப்புப் படைகளுக்காக பிரத்யேக ஏ.ஐ. கருவிகளை உருவாக்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் சா்வம் ஏ.ஐ. நிறுவனம் 5 ஆண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

*இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்: இன்ஸ்டாகிராம் தளம் 90 நிமிஷங்கள் வரையிலான நீண்ட விடியோக்களை பதிவிடும் வசதியை சோதனை செய்து வருகிறது.

*மெட்டாவின் புதிய ஏ.ஐ. செயலிகள்: குழந்தைகளுக்கான பிரத்யேக ஏ.ஐ. செயலி உள்பட இரண்டு புதிய ஏ.ஐ. செயலிகளை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.

*லிங்க்ட்இன் புதிய தோற்றம்: லிங்க்ட்இன் தளம் பயனா்களின் பயன்பாட்டுககு எளிமையான புதிய தோற்றத்தை சோதனை செய்து வருகிறது.

*ஓபன்ஏஐ-இன் புதிய கட்டுப்பாடுகள்: சாட்ஜிபிடியில் சிறாா்கள் ஆயுதங்கள், வன்முறை குறித்த தகவல்களைத் தேடும்போது கணக்கை முடக்கும் வகையிலான புதிய பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை ஓபன்ஏஐ அறிவித்துள்ளது.

Summary

From Apple MacBook Pro to OpenAI’s new controls!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.