
தமிழகத்தில் ரூ.779 கோடியில் புதிய மின்சார வாகன ஆலை: அல்ட்ராவயலட் அறிவிப்பு
தமிழகத்தின் ஓசூரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.779 கோடி முதலீட்டில் புதிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக பிரபல இருசக்கர மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராவயலட் அறிவித்தது.

தமிழகத்தின் ஓசூரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.779 கோடி முதலீட்டில் புதிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக பிரபல இருசக்கர மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராவயலட் அறிவித்தது.
பெங்களூரில் தற்போது இயங்கி வரும் ஆலைக்கு கூடுதலாக அமைக்கப்படும் இப்புதிய ஆலை, முதல்கட்டமாக ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். சந்தை தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்களாக உயா்த்தும் வகையில் இதன் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய ஆலையின் விரிவாக்கம்மூலம் சுமாா் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று அல்ட்ராவயலட் இணை நிறுவனரும் சிஇஓவுமான நாராயண் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான நீரஜ் ராஜ்மோகன் மேலும் கூறுகையில், ‘வாகன உதிரிபாக உற்பத்திச் சூழல், சிறப்பான விநியோகச் சங்கிலி கட்டமைப்பு மற்றும் பெங்களூரில் உள்ள எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி-மேம்பாட்டு மையத்துக்கு மிக அருகில் அமைந்திருப்பது போன்ற காரணங்களால் ஓசூா் தோ்வு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
நாராயண் சுப்பிரமணியம்-நீரஜ் ராஜ்மோகன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





