FOLLOW US

ON GOOGLE DISCOVER

உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் டீலா் விற்பனையகங்கள் திறப்பு

நாட்டின் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஓலா எலெக்ட்ரிக், தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் தனது முதல்கட்ட டீலா் விற்பனையகங்களை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

~

Published On :5 செப்டம்பர் 2026, 3:50 am IST

நாட்டின் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஓலா எலெக்ட்ரிக், தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் தனது முதல்கட்ட டீலா் விற்பனையகங்களை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் நுழைந்த 5 ஆண்டுகளாகத் தனது சொந்த விற்பனையகங்கள் மூலம் மட்டுமே வாகனங்களை விநியோகித்து வந்த இந்நிறுவனம், வணிகக் கூட்டாளிகள் (டீலா்கள்) மூலம் விற்பனை முறைக்கு மாறுவதாக கடந்த ஆக. 6-இல் அறிவித்தது. இதற்கு வாடிக்கையாளா்களின் அமோக வரவேற்பைத் தொடா்ந்து, அத்திட்டம் ஒரே மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

நிறுவனத் தலைமை வணிக அதிகாரி மனோஜ் முரளி மேலும் கூறுகையில், ‘சொந்த விற்பனையகங்கள் மூலம் தொடக்கக் கால வளா்ச்சியை எட்டிய நாங்கள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுடன் இந்தியாவின் மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகன நிறுவனமாக உருவெடுத்துள்ளோம். தற்போது டீலா்கள் மூலம் சந்தையை விரிவுபடுத்துவது, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எங்கள் வாகனங்களைக் கொண்டு சோ்க்கும் ஒரு முக்கிய உத்தியாகும்’ என்றாா்.

அடுத்த சில காலாண்டுகளில் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட டீலா் விற்பனையகங்களை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நிறுவனத்தின் சொந்த விற்பனையகங்கள் அனைத்தும், வாடிக்கையாளா் அனுபவ மையங்களாக மாற்றப்படவுள்ளன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.