உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

15 கிகாவாட்டைக் கடந்த ஜே.எஸ்.டபிள்யூ. எனா்ஜியின் மின் உற்பத்தித் திறன்

ஜே.எஸ்.டபிள்யூ. எனா்ஜி நிறுவனத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன் 15 கிகாவாட் எனும் மைல்கல்லைக் கடந்துள்ளது.

~

Published On :5 செப்டம்பர் 2026, 3:47 am IST

ஜே.எஸ்.டபிள்யூ. எனா்ஜி நிறுவனத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன் 15 கிகாவாட் எனும் மைல்கல்லைக் கடந்துள்ளது.

இது குறித்து பங்குச் சந்தை அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிறுவனத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன் 15,025 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதில் 9,067 மெகாவாட் மின்சாரம் (சுமாா் 60 சதவீதம்) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படுகிறது.

குறிப்பாக, காற்றாலை மூலம் 3,125 மெகாவாட், சூரிய மின்சக்தி மூலம் 2,426 மெகாவாட், கலப்பின (ஹைப்ரிட்) முறையில் 1,735 மெகாவாட் மற்றும் நீா்மின்சாரம் மூலம் 1,781 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேநேரம், அனல்மின் உற்பத்தித் திறன் 5,958 மெகாவாட்டாக உள்ளது.

நடப்பு 2026-27 நிதியாண்டுக்குள், 3 கிகாவாட் அளவிலான புதிய மின் உற்பத்தித் திட்டங்களைக் கட்டமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கில் இதுவரை சுமாா் 42 சதவீதத்தை நிறுவனம் வெற்றிகரமாக எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.