வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கயத்தாறில் 100 மெகாவாட் சூரியமின் திட்டம் தொடக்கம்

தமிழகத்தின் கயத்தாறில் 100 மெகாவாட் சூரியமின் திட்டத்தை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது பற்றி....

Published On :

டாடா குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான டாடா பவா் ரினியூவபிள்ஸ், தமிழகத்தின் கயத்தாறில் 100 மெகாவாட் சூரியமின் திட்டத்தை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

சுமாா் 2.61 லட்சம் அதிநவீன சூரியமின் தகடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த 100 மெகாவாட் மின்திட்டம் மூலம், ஆண்டுதோறும் 24.06 கோடி யூனிட் தூய்மை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரம், கயத்தாறில் உள்ள 400 கிலோவாட் துணை மின்நிலையம் வழியாக டாடா குழுமத்தைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களின் சொந்தப் பயன்பாட்டுக்காக நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

இப்புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதன்மூலம், நிறுவனத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 7 ஜிகாவாட் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இந்த 7 ஜிகாவாட் உற்பத்தியில், 5.7 ஜிகாவாட் மின்சாரம் சூரியசக்தி மூலமாகவும், மீதமுள்ள 1.3 ஜிகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலமாகவும் கிடைக்கிறது.

இதுதவிர கூடுதலாக 5.3 ஜிகாவாட் திறன் கொண்ட திட்டங்களை பல்வேறு கட்டங்களில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதில் 2.2 ஜிகாவாட் சூரியமின் மற்றும் 3.1 ஜிகாவாட் காற்றாலைத் திட்டங்கள் அடங்கும்.

இப்புதிய திட்டங்கள் அனைத்தும் அடுத்த 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளில் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரவுள்ளன. வரும் 2030-க்குள் 500 ஜிகாவாட் அளவுக்குத் தூய்மையான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் மாபெரும் இலக்கை அடைவதற்கு, டாடா நிறுவனத்தின் இத்தகைய தொடா் நடவடிக்கைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.