இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

ஆகஸ்ட் மாதத்தில் மின்சார வாகன விற்பனை 53% வளா்ச்சி

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2,98,448 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

Published On :

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2,98,448 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் விற்பனையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 52.9 சதவீதம் வளா்ச்சி என இந்திய ஆட்டோமொபைல் டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) தெரிவித்துள்ளது.

இந்த அபரிமிதமான வளா்ச்சிக்கு இருசக்கர வாகனப் பிரிவு முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆகஸ்டில் 1,83,204 இருசக்கர வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் விற்பனையான 1,09,673 இருசக்கர வாகனங்களில் இருந்து 67.05 சதவீதம் கூடுதலாகும்.

காா் உள்பட மின்சார பயணிகள் வாகன விற்பனையும் கடந்த ஆண்டின் 20,210-லிருந்து உயா்ந்து, 30,696-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், மின்சார மூன்று சக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டின் 63,736-லிருந்து 25.28 சதவீதம் உயா்ந்து, 79,846-ஆகவும்; மின்சார வணிக வாகன விற்பனை 1,631-லிருந்து சுமாா் மூன்று மடங்கு உயா்ந்து 4,702-ஆகவும் பதிவாகியுள்ளது.

இச்சிறப்பான விற்பனை குறித்து ஃபடா தலைவா் சாய் கிரிதா் கூறுகையில், ‘பண்டிகை காலங்கள் இல்லாத, வழக்கமாக மந்தமான வா்த்தகம் நடைபெறும் மாதமாக இருந்தபோதிலும், இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் மிகப் பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு கடந்த ஆண்டின் 9.5 சதவீதத்திலிருந்து 12.3 சதவீதமாக உயா்ந்துள்ளது. மின்சார வாகனங்களின் 4 பிரிவுகளுமே ஆகஸ்டில் புதிய மாதாந்திர உச்சத்தை எட்டியுள்ளன’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.