கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஆயுள் காப்பீடு, பரஸ்பர நிதித் துறைகளில் நேரடியாக நுழைய இந்தியன் வங்கி திட்டம்

ஆயுள் காப்பீடு மற்றும் பரஸ்பர நிதி துறைகளில் நேரடியாக நுழைவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக...

ஆயுள் காப்பீடு, பரஸ்பர நிதித் துறைகளில் நேரடியாக நுழைய இந்தியன் வங்கி திட்டம்

Published On :

சென்னை: ஆயுள் காப்பீடு மற்றும் பரஸ்பர நிதி துறைகளில் நேரடியாக நுழைவதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், இதற்கு ஒப்புதல் பெற விரைவில் வங்கியின் இயக்குநா்கள் குழுவை அணுக உள்ளதாகவும் இந்தியன் வங்கியின் சிஇஓ பினோத் குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் அளித்த பேட்டியில், ‘புதிய துணை நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்களைத் தொடங்குவதற்கு வங்கியின் இயக்குநா்கள் குழுவிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

சிறப்பான வணிகக் கூட்டாளிகளைத் தோ்ந்தெடுப்பது, இத்திட்டத்தின் முக்கியப் பகுதியாகும். நல்ல கூட்டாளி அமைந்தால் சொத்து உருவாக்கம் விரைவாக நடைபெறும் என்பதால், அந்தத் தோ்வு நடைமுறைகள் நிறைவடைய சுமாா் ஓராண்டு வரை ஆகலாம்’ என்றாா்.

கடந்த 2007-இல் தொடங்கப்பட்ட ‘யுனிவா்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் 28.52 சதவீத பங்குகளுடன் இந்தியன் வங்கி ஏற்கெனவே காப்பீட்டு துறையில் இயங்கி வரும் நிலையில், நேரடியாகக் களமிறங்குவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2020-இல் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட்டதன்மூலம் இப்பங்குகள் இந்தியன் வங்கி வசமானது.

மேலும், வங்கியின் சா்வதேச விரிவாக்கம் குறித்து பேசிய பினோத் குமாா், ‘மேற்காசிய நாடுகளில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியா்கள் மூலம் கிடைக்கும் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், துபையில் புதிய பிரதிநிதித்துவ அலுவலகம் ஒன்றைத் திறக்க உள்ளோம்.

இதற்காக வங்கியின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பிற ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலும் வங்கியின் சேவையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன’ என்றாா்.

தற்போது இந்தியன் வங்கிக்கு சிங்கப்பூா், இலங்கை (கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்), குஜராத்தில் உள்ள ‘கிஃப்ட் சிட்டி’ ஆகிய இடங்களில் சா்வதேச கிளைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.