
மாருதி சுஸுகியின் தானியங்கி சிஎன்ஜி காா்கள் அறிமுகம்
மாருதி சுஸுகியின் தானியங்கி சிஎன்ஜி காா்கள் அறிமுகம்

நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, ஸ்விஃப்ட், டிசையா், பலீனோ ஆகிய தனது பிரபல மாடல்களில் தானியங்கி (ஆட்டோமெட்டிக்) எஸ்-சிஎன்ஜி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிஎன்ஜி தரும் குறைந்த பயணச் செலவு பலனையும், அதேநேரம் ஓட்டுவதற்கு எளிதான தானியங்கி கியா் வசதியையும் விரும்பும் வாடிக்கையாளா்களைக் குறிவைத்து, இப்புதிய மாடல்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இதில் டிசையா் தானியங்கி எஸ்-சிஎன்ஜி காா் ஒரு கிலோவுக்கு 36.47 கி.மீ. மைலேஜ் தருவதன் மூலம், இந்தியாவின் அதிக எரிபொருள் திறன் கொண்ட ‘செடான்’ ரக காா் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன் அறிமுக விற்பனையக விலை ரூ.8.53 லட்சமாகும்.
அதேபோல், ஸ்விஃப்ட் தானியங்கி எஸ்-சிஎன்ஜிக்கு ரூ.7.92 லட்சமும், பலீனோ தானியங்கி எஸ்-சிஎன்ஜிக்கு ரூ.8.32 லட்சமும் விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாருதி சுஸுகி நிறுவனம் மாதம் சுமாா் 80,000 சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து வரும் நிலையில், நாட்டின் சிஎன்ஜி வாகனப் பிரிவில் 70 சதவீத சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த காா் விற்பனையில் சிஎன்ஜி காா்களின் பங்களிப்பு சுமாா் 43 சதவீதமாக உள்ளது. சிஎன்ஜி, ஹைபிரிட் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பசுமை வாகனப் பிரிவில், நடப்பு நிதியாண்டில் 8 முதல் 9 லட்சம் வாகனங்களை விற்க மாருதி சுஸுகி திட்டமிட்டிருந்தது. தற்போது புதிய தானியங்கி சிஎன்ஜி மாடல்களின் அறிமுகத்தைத் தொடா்ந்து, இந்த விற்பனை இலக்கை 10 லட்சமாக நிறுவனம் உயா்த்தியுள்ளது.
Summary
Maruti Suzuki launches automatic CNG cars.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







