மாருதி சுசூகி நிறுவனம் 2026 பிரெஸ்ஸா பேஸ்லிப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மாடலில் பல்வேறு மாற்றங்களுடன் மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன?
புதிய மாருதி பிரெஸ்ஸாவில் டர்போ பெட்ரோல் என்ஜின் சேர்க்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் புதிய முன்புற கிரில், மாற்றியமைக்கப்பட்ட பம்பர், புதிய அலாய் வீல், டர்போ வேரியண்டுக்கு பிரத்யேக சிவப்பு சிற அலங்காரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் முன்பை விட கம்பீரமான தோற்றத்தை பெற்றுள்ளது.
உட்புறத்தில் புதிய இருக்கை அமைப்பு, மென்மையான டாஷ்போர்டு, 64 வண்ண ஆம்பியன்ட் விளக்குகள் ஆகியவை சேர்க்கப்ட்டுள்ளதால், பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.
6 ஸ்பீட் கியர் பாக்ஸ் நீண்ட தூரப் பயணங்களை மேலும் எளிதாக்குகிறது. பின்புறத்தைப் பொறுத்தவரை, பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் முந்தைய மாடலில் உள்ள அதே பின்புற வடிவமைப்பு அமைப்பையே தக்க வைத்துக் கொண்டுள்ளது. எடுப்பான பம்பர், தடிமனான வெள்ளி நிற ஸ்கிட்பிளேட்டுகள், சதுர வடிவ LED டெயில் லேம்ப்கள் மற்றும் ஒருங்கிணைந்த ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை இதில் அடங்கும்.
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, பிரெஸ்ஸாவில் 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஆகியவை உள்ளன.
முன்புற பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் வார்னிங், ரியர் கிராஸ்-டிராஃபிக் வார்னிங் போன்ற அம்சங்கள் அனைத்தும் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சேர்க்கப்பட்டுள்ளன.
முந்தைய பிரெஸ்ஸா மாடலைப் போலல்லாமல், மேம்படுத்தப்பட்ட பிரெஸ்ஸா BNCAP-ஆல் சோதிக்கப்பட்டு 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. முந்தைய மாடலை விட பாதுகாப்பு அம்சத்தில் ஒரு படி அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். மக்கள் மத்தியில் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவிக்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
இதன் ஆரம்ப விலை - ரூ. 7.40 லட்சத்தில் கிடைக்கிறது.
A grand entry with 5-star safety: What are the updates in the new Maruti Brezza?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விற்பனையில் மாருதி சுசூகி முதலிடம்! 6 மாதங்களில் 1.26 லட்சம் கார்கள்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. பயணம்! குறைந்த விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் மாருதி!
இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!

மே மாதத்தில் கார் விற்பனையில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாருதி சுஸுகி!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



