ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. பயணம்! குறைந்த விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் மாருதி!

மாருதி நிறுவனத்தின் இ விட்டாரா மின்சார காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். வேறு சிறப்புகள் என்னென்ன?

News image

இ விட்டாரா - படம் / நன்றி - மாருதி

Updated On :22 ஜூலை 2026, 3:59 pm IST

மாருதி நிறுவனத்தின் இ விட்டாரா மின்சார காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒருமுறை சார்ஜ் செய்தால் 543 கிலோ மீட்டர் செல்லலாம் என நிறுவனம் அறிவித்திருந்தாலும், நிஜ உலகப் பயன்பாட்டில் 400 கி.மீ. தூரம் வரை இந்த கார் பயணிப்பதாக பயனர்கள் குறிப்பிடுகின்றனர்.

நிஜ உலகப் பயன்பாட்டில் நகரப் பகுதி சாலைகளில் பயன்படுத்தும்போது 403 கி.மீ. தூரம் வரை செல்வதாகவும், நெடுஞ்சாலைகளில் அதிகப்படியான வேகம் காரணமாக 338 கி.மீ. தூரம் மட்டுமே செல்ல முடிவதாகவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் என சேர்ந்து பயன்படுத்தும் சூழலில் 350 முதல் 440 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.

மாருதி இ விட்டாரா சிறப்பம்சங்கள்

மாருதி இ விட்டாராவின் ஜீடா மாடல் 61KWh பேட்டரி கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என மாருதி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதன் ஆல்-வீல் ட்ரைவ் வேரியன்டானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 7.4 விநாடிகளில் எட்டும்.

காரினுள்ளே 10.25 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உடன் கூடிய 10.11 இன்ச் தொடுதிரை, இன்ஃபோடெயின்மெண்ட், 18 இன்ச் அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேசிய அளவிலான சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

ஆன்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், ப்ரேக் அசிஸ்ட், 360 டிகிரி வியூ கேமரா, முன் மற்றும் பின்புற பார்கிங் சென்சார்கள், அடாப்டிவ் ஹைபீம் சிஸ்டம், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், குழந்தைகளுக்கான பிரத்யேக இருக்கைகள் இ விட்டாராவில் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி இ விட்டாரா மின்சார கார் விலை ரூ.15.99 லட்சத்தில் தொடங்கி ரூ.20.01 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காரின் பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் முறையைத் தேர்வு செய்தால் இதன் தொடக்க விலை ரூ.10.99 லட்சம் மட்டுமே.

Summary

Travel 400 km on a single charge Maruti offers high mileage at an affordable price

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.