பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

மீண்டும் விலை உயர்வை பரிசீலிக்கும் டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ் - (கோப்புப்படம்)

Published On :

புதுதில்லி: அதிகரித்து வரும் செலவு உள்ளிட்டவையால், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் விலை உயர்வை குறித்து ஆலோசித்து வருவதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா இன்று தெரிவித்தார்.

மூலப்பொருள் விலை உயர்வு கணிசமான பகுதியை நாங்கள் ஏற்றுக்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகளையும் நாங்கள் துரிதப்படுத்தியுள்ளோம்.

இதற்கிடையில், அக்டோபர் 1 முதல் வணிக வாகனப் பிரிவுகளில் 1 சதவீதம் வரை விலை உயர்வை டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து, உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட விலை உயர்வு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதே வேளையில் தேவைக்கு ஏற்ப விநியோகம் சற்று குறைவாக இருப்பதால் வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் தள்ளுபடியும் குறைந்துள்ளன.

மூலப்பொருள் விலை உயர்வுக்கு ஏற்ப அதே வேகத்தில் விலையை உயர்த்த முடியாத நிலையும், லாப வரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், இதனால் செலவைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சந்திரா தெரிவித்தார். விலை உயர்வு ஏற்படும் அதே வேகத்தில் அதைச் சந்தைக்குக் கடத்துவது சாத்தியமில்லை. இது கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது.

விநியோகம், உற்பத்தி சார்ந்த பெரிய சிக்கல்கள் ஏதுமில்லை என்றும், அதே சமயம் மூலப்பொருட்களின் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், டாடா மோட்டார்ஸ் இன்று முற்றிலும் புதிய 'டாடா ஏரிஸ்' காரை அறிமுகப்படுத்தியது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காகக் கார் வாங்குபவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த 'காம்பாக்ட் செடான்' ரக காரின் ஆரம்ப விலை (எக்ஸ்-ஷோரூம்) பெட்ரோல் மாடல் ரூ. 5.29 லட்சமாகவும், ஐ-சிஎன்ஜி (iCNG) மாடல் ரூ. 6.29 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Summary

Tata Motors Passenger Vehicles Managing Director Shailesh Chandra on Friday said the company is weighing further price increase.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER