தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எப்படியிருந்தவர் இப்படி ஆகிட்டார்: புதிய தோற்றத்தில் கொள்ளையன் முருகன்!

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2019, 12:29 pm

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், முருகன் பெங்களூரு எம்.ஜி. ரோடு மேயோ ஹால் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள தகவல் வெளியானது. பெங்களூரு பானசவாடி காவல்நிலையத்தில் முருகன் மீது 83 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரு எம்.ஜி சாலையிலுள்ள மேயோ ஹால் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Story image

திருவாரூர் கொள்ளையன் முருகனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளான். இந்த நோயினால் உடல் மெலிந்தும் பற்கள் விழுந்து மிக மோசமான நிலையில் காணப்பட்டான்.

கடந்த ஆண்டு முருகனின் தோற்றம் மிகவும் மோசமான நிலையில் முகத்தில் அறுவை சிகிச்சை சர்ஜரி செய்து 3 பற்களை மாற்றி பல்செட் பொருத்தியுள்ளனர். இதனால் பழைய தோற்றத்திற்கும் தற்போது உள்ள தோற்றத்திற்கும் அதிகம் வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் எப்போதும் நெருக்கமாக இருக்கும் போலீசுக்கே முருகனை அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள்.

தான் தங்கியிருந்த இடத்திலும், போலீஸ் விசாரணையிலும் முருகனின் புதிய தோற்றம் அவனை தப்பிக்க வைக்க வசதியாக இருந்து உள்ளது. முருகன் சரண் அடைந்தபோது, இவனா கொள்ளையன் முருகன் என போலீசார் வியப்புடன் பார்த்தனர். முருகனின் புதிய தோற்றம் அனைத்து போலீசாரையும் வியக்க வைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.