தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உறவுக்குக் "கை'கொடுப்போம்

பிரிந்தவர்கள் கூடும்போது, பழையதை எல்லாம் மறந்துவிடுதல்தானே இயல்பு. ஆம். அதுதான் எல்லோருக்கும் நல்லது. இது குடும்ப உறவுக்கு நல்லது. அரசியலுக்கு ....  அரசியல் கட்சிகளுக்கு நல்லதுதான். மக்களும் பழையதை எல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:29 am

மு.சந்திரசேகரன்

பிரிந்தவர்கள் கூடும்போது, பழையதை எல்லாம் மறந்துவிடுதல்தானே இயல்பு. ஆம். அதுதான் எல்லோருக்கும் நல்லது. இது குடும்ப உறவுக்கு நல்லது. அரசியலுக்கு ....

 அரசியல் கட்சிகளுக்கு நல்லதுதான். மக்களும் பழையதை எல்லாம் மறந்துவிட்டால் இன்னும் நல்லது. பொது மக்களின் நன்மதிப்பை பெறுவதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

 பா.ம.க. எந்த அணியில் சேரப் போகிறது என்ற கேள்விக்கு ஏற்கெனவே எதிர்பார்த்தபடி வெள்ளிக்கிழமை பதில் கிடைத்துவிட்டது. திமுக அணியில் சேர பா.ம.க. கடந்த ஆண்டே விருப்பக் கடிதம் கொடுத்தது. அதை திமுக ஏற்றாலும், அன்புமணிக்கு உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காமல் போனதால், அணியில் சேருவதா என்பது பற்றி பா.ம.க. அறிவிக்காமலே இருந்தது.

 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், தனித்துப் போட்டியிடுவதில்லை என்று ஏற்கெனவே முடிவெடுத்துவிட்ட பா.ம.க., இரு தரப்பில் இருந்தும் அழைப்புகள் வருவதாகக் கூறிவந்தது.

 இருந்தாலும் திமுக அணியில் சேருவதைத்தான் பா.ம.க. நிர்வாகிகளில் ஒருசாரார் விரும்பினர் என்பது சட்டப்பேரவைக் கூட்டங்களிலும், வெளியிலும் நன்றாகவே தெரிந்தது.

 ஒரு கவுன்சிலர் கூட இல்லாத அரசியல் கட்சிகள் கூட 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தைக் கண்டித்து அறிக்கை விட்ட நிலையில் பா.ம.க. மட்டும்தான் அதுபற்றி எந்தக் கருத்துமே கூறவில்லை. திமுக தலைமைக்கு வருத்தம் தரும் எதையும் செய்யக் கூடாது என்பதில் பா.ம.க. தலைமைக்கு இருந்த கவனமே இதற்கு காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

 இதை இடதுசாரிகள் சுட்டிக்காட்டியபோது, கேரளம், மேற்குவங்கத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பவா என்று கேட்டார் ராமதாஸ்.

 இருந்தாலும் இடதுசாரிகள் அமைதிகாத்து வந்தனர். அதிமுக அணிக்கு ராமதாஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்கும் என்பதால்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் கைது, மருந்து நிறுவனங்கள் மூடல் போன்ற பிரச்னைகளில்கூட இடதுசாரிகள் தமிழகத்தில் அதிக தீவிரம் காட்டாமல் இருந்தனர்.

 முதல்வரையும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவையும்,ஆண்டிமடம் எம்.எல்.ஏ. சிவசங்கரையும் (திமுக) மிரட்டும் வகையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு பேசினார் என்பதுதான் அப்போது பா.ம.க. நீக்கப்பட காரணமாக இருந்தது.

 கூட்டணிக்காக அவமானப்பட முடியாது என்று திருமண நிகழ்ச்சியில் கருணாநிதி கூறினார். குரு மீது ராமதாஸ் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால் கூட்டணியில் இருந்து பா.ம.க.வை நீக்குவதாக திமுக பொதுக்குழுவில் 2008 ஜூன் 17 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 அப்போதும், குரு தவறாக எதுவும் பேசவில்லை என ராமதாúஸô, பா.ம.க. தலைவர்களோ கூறவில்லை. இதைவிட மோசமாக திமுகவினர் பேசியிருக்கிறார்கள் என்றுதான் குறிப்பிட்டனர்.

 அதனால் கூட்டணியைவிட்டு பா.ம.க. நீக்கப்பட்டது.

 அதன்பிறகு காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

 2009 மக்களவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

 இடைத்தேர்தல்களில் பங்கேற்பதில்லை என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என ராமதாஸ் கூறிவந்தார். ஆனால், தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது. 41 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. அங்கு அதிமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதுடன் டெபாசிட் தொகையையும் இழந்தது.

 அதன்பிறகு பென்னாகரம் பார்முலா என்று கூறி பல பகுதிகளில் பிரசாரப் பணிகளை பா.ம.க. மேற்கொண்டது. 50 தொகுதிகளில் தனித்து வெல்ல முடியும் என்றுகூட அதன் தலைவர்கள் கூறினர்.

 இருந்தாலும் 31 தொகுதிகளுக்கு திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

 சோனியா விரும்பாத நிலையில், திமுகவில் இடம் கிடைத்திருப்பதும், அதுவும் முந்தைய தேர்தலில் போட்டியிட்ட அதே அளவு இடங்கள் கிடைத்திருப்பதும் பா.ம.க.வைப் பொருத்த வரை நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய விஷயமாகக் கருதப்படுகிறது. பழைய கசப்பு உணர்வெல்லாம் நீங்கிவிட்டதா என்பது பற்றி ராமதாஸ், கருணாநிதி ஆகிய இரு தலைவர்களுமே கருத்து எதுவும் கூறவில்லை. அதுபற்றி அவர்கள் வெளியில் பேசவும் விரும்ப மாட்டார்கள்.

 பா.ம.க.வுக்கு தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகிவிட்டதால், காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்ற அடுத்த கேள்வி எழுந்துள்ளது. முந்தைய தேர்தலில் திமுக அணியில் இடதுசாரிகளுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்தத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கொடுப்பது போக மீதியில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் பங்கீடு செய்து கொள்ள வேண்டும்.

 திமுக 140-க்கு குறையாமல் போட்டியிட விரும்பும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 60 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 2006-ல் காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளில் போட்டியிட்டது. இப்போது அதைவிட கூடுதலாக கிடைக்கும் என்றாலும், அவர்கள் விரும்பும் எண்ணிக்கையில் கிடைக்குமா என்பது சந்தேகமே.

 அரசியல், தேர்தல் என்றாலே விட்டுக் கொடுப்பது வழக்கம்தான்; எல்லோரும் எதிர்பார்ப்பதைவிட சுமுகமாக தொகுதிப் பங்கீடு முடிந்துவிடும் பாருங்கள் என்கிறார் திமுக மூத்த தலைவர் ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.