சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பத்திரிகை தடை என்னை அடக்கிவிடாது!

ஹரிஜன் பத்திரிகை மீது தடை விதிக்கப்பட்டால் என்ன செய்வேன் என்று கேட்கிறீர்கள்.

News image
Updated On :26 டிசம்பர் 2018, 1:07 am IST

ஹரிஜன் பத்திரிகை மீது தடை விதிக்கப்பட்டால் என்ன செய்வேன் என்று கேட்கிறீர்கள். இப்போது எனக்குத் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். கேட்டை முன்கூட்டி எதிர்பார்க்கும் வழக்கம் எனக்கு கிடையாது. மனதை அவ்வாறு பண்படுத்திக்கொண்டேன். தீமை என்னை நெருங்கிவிட்டால் அதற்கு நிவாரணம் என்ன என்பதை நன்றாக உணர்கிறேன். தெய்வத்துக்குப் பயந்து நடப்பவன் செயலாற்றும் வழி அதுவே.
தெய்வ பயம் மற்றெல்லா பயங்களையும் போக்குகிறது. ஆனால், உறுதியாக ஒன்று கூறுகிறேன். ஹரிஜன் பத்திரிகையைத் தடுத்துவிடுவதால், என்னை அடக்கிவிடுவதாக ஒருபோதும் ஆகிவிடாது.
மேற்கண்டவாறு மகாத்மா காந்தி ஹரிஜன் பத்திரிகையில் எழுதுகிறார். ஒருவர் கடிதம் மூலம் எழுப்பிய கேள்விக்கு மகாத்மா காந்தி பின்வருமாறு பதிலளிக்கிறார்:
தாராள புத்தியுடன் நடந்துகொள்ள எந்த சர்க்காருக்கும் முடியாது. தனி மனிதன், தனக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய ஒரு செயலை மேற்கொள்ளும் போதுதான் தாராளம் காட்டுகிறான். ஆனால் தமக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய எந்த காரியத்தையும் நடத்த சர்க்காருக்கு முடியாது. நீதி என்பது கடன் போன்றது. கொடுத்து தீர்க்கக் கூடியது. ஆகையால் சர்க்கார், ஹரிஜன் பத்திரிகையை வழக்கப்பிரகாரம் வெளிவருவதற்கு அனுமதிப்பதென்றால் அவர்கள் கருத்துக்கு பொருந்தி இருக்கிறது என்பதே பொருள். அவ்வாறு செய்வது தங்களுக்கு நல்லதல்ல என்று சர்க்கார் கருதுமாகில், தடை விதிக்க தயங்காது. தடையை மீறி பிரசுரிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது என்று இதை மீண்டும் ஆரம்பிக்கையில் நான் கூறினேன். சர்க்கார் விரும்புமானால், நான் மறுபடியும் பத்திரிகை பிரசுரத்தை நிறுத்தி விடுவேன். அவர்கள் அவ்வாறு செய்தால் பொதுமக்களுக்கே நஷ்டம்.

தினமணி (17-05-1942)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.