தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!

ஆசனம் 26. கோமுகாசனம்

கோ என்றால் பசு. பசு உட்கார்ந்திருக்கும்போது அதன் முகப்புத் தோற்றத்தைப்போல இருப்பதால் இதற்கு இப்பெயர். பசுத்தலை ஆசனம் என்றும் பொருள் கொள்ளலாம்.

News image
Updated On :17 மார்ச் 2016, 6:05 am

கே.எஸ். இளமதி

அஷ்டாங்க யோகம்

நியமம்

கைத்தட்டல்

ஒரு ரசிகன்தான் கலைஞன் ஆக முடியும். ஈடுபாடு இல்லை என்றால், ரசிகனாக ஆவதற்குக்கூட தகுதி கிடையாது என்று “கலைமாமணி” கனகசுப்பு, தமிழ்ச் சங்க இலக்கிய மாநாட்டில் பேசியபோது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டினார்கள். பேசி முடித்த பிறகு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு கையெழுத்திட்டு பெருமிதப்பட்டுக்கொண்டார்.

ஒருகாலத்தில், கனகசுப்பு நல்ல ரசிகனாக இருந்தவர். பட்டிமன்றங்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், அரசியல் கூட்டங்கள் என்று எங்கு எது நடந்தாலும் போய் உட்கார்ந்துவிடுவார். தானும் அப்படி மேடைகளில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அன்று ஆசைப்பட்டதை இன்று அவர் அடைந்திருக்கிறார்!

நிகழ்ச்சி முடிந்து, அன்று இரவு சுற்றுலா மாளிகையில் படுத்திருந்தபோது பழைய நினைவுகளை அசைபோட்டார் கனகசுப்பு.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தான் கனகசுப்பு. ஆனால், இங்கிதத்தை இழந்துகொண்டிருந்தான். சபையோர்களை சொற்பொழிவால் கட்டிப்போட்டுவிடத் துடித்தான். ஆனால், தகுதியை அறியவில்லை. காரணம், தன்னை அறியவில்லை.

ஆசை பயமறியாது; வெட்கமும் அறியாது. ஆசைப்படுவோருக்கு இங்கிதம் தெரியாது. ஆசை தலை தூக்கும்போது தன்னை அறியாது; தன்மானத்தையும் அறியாது. அதனால் அவமானபட நேரிடும்.

“வானவன் கான சபா”வில் மாதம்தோறும் இலக்கிய விழா நடக்கும்.

கனகசுப்புவின் முதல் சொற்பொழிவுக்காக, “கட்-அவுட்டு”கள் அமர்க்களப்பட்டன!

கனகசுப்பு, தனக்கு வேண்டியவர்களின் பட்டாளத்தையே விழாவுக்கு வரவழைத்திருந்தான். அரங்கில் கூட்டம் நிரம்பியிருந்தது.

கனகசுப்பு பேசினான். பேசினான். பேசிக்கொண்டே இருந்தான். ஆனால், பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் பேசத் தெரியவில்லை. போரடிக்கிறது என்று பார்வையாளர்கள் நூதனமாகக் கை தட்டினார்கள். அதை ஆதரவாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

சொந்த அனுபவங்களைச் சொல்லும்போது, கேட்போரின் உணர்வுகளைக் கவனிக்கத் தவறினான்!

போதும் போதும் கை தட்டினாலும், வலிந்து வார்த்தைகளைக் கோத்துப் பேசினான். சபையில் கூட்டம் பாதியானது. அப்போதும் பேசுவதே குறியாக இருந்தான். கூட்டம் கால்வாசியானது. மேடையில் இருந்தவர்கள், தூங்குவதே குறியாக இருந்தார்கள். எஞ்சியிருந்த கனகசுப்புவின் உறவுகள் பொறுமை இழந்து, வெறுப்போடு கை தட்டியபோதுதான் தலைவர் தர்மலிங்கம் பொங்கி எழுந்தார்.

கனகசுப்புவின் காதருகே போய், “எல்லாரும் போயாச்சு. இன்னும் என்ன பேச்சு. பத்து பேர்தான் இருக்காங்க. அவங்களும் போறதுக்குள்ள முடிங்க சீக்கிரம்” என்றார்.

“பயப்படாதீங்க தர்மலிங்கம். இந்தப் பத்துப் பேரும் என்னோட விருந்தாளிங்கதான். நான் போறவரைக்கும் நகரமாட்டாங்க” என்றார் கனகசுப்பு.

தலைவர் தர்மலிங்கத்துக்குப் பற்றிக்கொண்டு வந்தது. மைக்கை பிடுங்கி நடவடிக்கை எடுத்தார்.

“மன்னிக்க வேண்டும். இந்தச் சபையில் அடுத்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கனகசுப்புவின் சொற்பொழிவை அடுத்த மாதம் இதே கூட்டத்தில் கேட்டு இன்புறலாம்” என்று சொல்லிவிட்டு ஆஃப் செய்தார்.

கனகசுப்புவின் விருந்தாளிகள் பத்து பேரும் “மாமா... பெரியப்பா... சித்தப்பா… மாப்பிள்ளை... அண்ணா… தம்பி... என எல்லோரும் வரட்டுமா என்று கைகளை ஆட்டி விடைபெற்றுக்கொண்டார்கள்.

கனகசுப்புவைத் தனியே அழைத்துச் சென்ற விழாத் தலைவர் தர்மலிங்கம், பொறுமையாக எடுத்துச் சொன்னார்.

“...நாம எவ்வளவு நேரம் பேசறோங்கறது முக்கியமில்லை கனகசுப்பு. என்ன பேசிறோங்கறதுதான் முக்கியம். கூட்டம் கலையும்போதே உங்களுக்குத் தெரியவில்லையா?

“போனவங்களை விடுங்க சார். இருந்தவங்க என்னோட உறவுகளாக இருந்தாலும் கடைசிவரை இருந்து கேட்டாங்களே, அதைப் பார்த்தீங்களா?”

“உறவுகள் கூட்டம் நமக்குத் தேவையில்லை கனகசுப்பு. இது இலக்கியக் கூட்டம். அதை மறந்துடாதீங்க. அடுத்த மாதமாவது பார்த்துப் பேசுங்க” என்றார் தர்மலிங்கம்.

அடுத்த மாதக் கூட்டம் -

கனகசுப்பு எப்போதும்போலவே வளவளவென்றே பேசிக்கொண்டிருந்தார். பார்வையாளர்களும் வழக்கம்போலவே களைத்துப்போய்க் கலைந்தார்கள். விருந்தாளிகளும் கொட்டாவியுடன் தள்ளாடியபடியே வெளியேறினார்கள்.

தலைவர் தர்மலிங்கம் கடுமையாக எதிர்த்தார். அவரை எதுவும் சொல்லவிடாமல் தடுத்தார் கனகசுப்பு.

அடுத்த மாதக் கூட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது!

இனி எந்தக் கூட்டத்துக்கும் உங்களை அழைக்கப்போவதில்லை என்றார் தர்மலிங்கம்.

“நான் பேசுவதைக் கேட்கும் தகுதி யாருக்குமே இல்லை. எல்லாருக்கும் பொறாமை” என்றார் கனகசுப்பு.

“உங்கள் பேச்சைக் கேட்டால்தானே பொறாமை வரும் கனகசுப்பு. நீங்கள் சிறந்த பேச்சாளர்தான், சந்தேகம் இல்லை! ஆனால் சபை நாகரிகம் முக்கியம். ஒற்றையடிப் பாதையில் போகிறோம். பாதை முடிந்துவிட்டால் நின்றுவிட வேண்டும். யாரும் கேட்கத் தயாராக இல்லை என்றால், இங்கிதம் தெரிந்து பேச்சை அத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்ளுங்கள்”

“கேட்கவில்லை என்பதற்காக விட்டுவிட முடியுமா? நமது கருத்துகளை எப்படித்தான் சொல்ல முடியும்?”

“பாதை இல்லையென்றால் பயணமில்லை என்று பொருள் அல்ல. நாமே நமக்கென்று வேறு பாதை போட்டாக வேண்டும் கனகசுப்பு. உங்களால் போட முடியும்”.

“எனக்குப் புரியவில்லை” என்று கசப்புடன் கேட்டார் கனகசுப்பு.

“அப்படிக் கேளுங்கள் சுப்பு, நீங்கள் பேசும் விதத்தால் உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்க வேண்டும், அதுதான் முக்கியம்”.

“அது எப்படி?”

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஆயிரம் பேரைக் கவர்வதற்கு முன்னால் ஒருவரைக் கவர்ந்தாக வேண்டும். உங்கள் நண்பரிடம் உங்கள் குடும்பத்தினரிடம் பேசிப் பாருங்கள். அவர்கள் ரசிக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். நீங்கள் ஒருவரை மட்டும் கவர்ந்தால் போதும். உலகத்தையே கவர்ந்துவிடுவீர்கள். முயற்சிகளும் பயிற்சிகளும்தான் முக்கியம். ஒரு மணிநேரம்கூடப் பேசலாம். ஆனால் அதற்கு முன்னோடி ஒரு நிமிடப் பேச்சுதான்! ஐந்து நிமிடங்கள் கவர்ந்துவிட்டால், ஐந்து மணி நேரம்கூடப் பேசலாம்!

“…உட்கார்ந்துகொண்டிருக்கும் தலைகளைவிட எழுந்து செல்லும் தலைகள்தான் உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பவை. அவர்கள்தான் எழுந்து செல்லாத கூட்டத்தை உருவாக்குபவர்கள்!“

“...உங்கள் முகத்துதித்தாக வருவோரை இனிமேல் அழைக்காதீர்கள். அவர்கள்தான் உங்கள் முதல் எதிரிகள். உங்கள் பேச்சுக்காக நாடி வருவோர்தான் உங்கள் உறவுகள்!”

“...காசு கொடுத்தால் கை தட்ட வரும் அரசியல் கூட்டமோ, சினிமா கூட்டமோ அல்ல. இனிய தமிழை மட்டுமே பேசும் இலக்கியக் கூட்டம் இது”.

“நீண்ட நேரம் பேசலாம். ஒரு வார்த்தைகூடத் தப்பாகிவிட்டாலும் உறவுகள் யாவும் பகையாகிவிடும்”.

“அப்படியா?” வியப்போடு கேட்டார் கனகசுப்பு.

“ஆமாம். முதலில் உயர்வான விஷயத்தைக் கனவு காணுங்கள். அதை நடைமுறைப்படுத்தும் வேட்கையோடு பேச முன்வாருங்கள். உங்களை அறியாமலேயே உள்ளிருந்து வார்த்தைகள் புறப்பட்டு வரும்! உங்களுக்குப் பின்னால் நாளை ஒரு கூட்டமே திரண்டு வரும்! உலகப் பிரபலமாக உங்களை நிறுத்தும். எனவே, நல்ல கனவுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பிறகு அதுவே உங்களுக்கு உள்ளிருந்து பேசும்!”

கனகசுப்பு, தர்மலிங்கத்தை கட்டித் தழுவிக்கொண்டார்.

“நீங்கள் தலைவர் அல்ல, நீங்கள்தான் என் குரு! என்னை எனக்கு அறிவித்த இறைவன். நீங்களே என் இலக்கியம். இலக்கியமே தெரியாமல் இலக்கியம் பேசப் புறப்பட்ட முட்டாள் நான். குறிக்கோள் இல்லாமலே பேசி கூட்டத்தை இழந்துகொண்டிருந்தேன். இப்போது விழித்துக்கொண்டேன். இனிமேல்தான் நான் இலக்கியத்தையே படிக்கப் போகிறேன். இதுவரை பேசியது நான், இனி பேசப்போவது என் இலக்கியம். இலக்கிய வேட்கையோடுதான் அடுத்து மேடை ஏறுவேன்” என்று மெய்சிலிர்க்கக் கூறினார் கனகசுப்பு.

இனிய நினைவோடு டெல்லியின் இளங்குளிர் காற்றோடு கண்ணயர்ந்தார் பிரபலச் சொற்பொழிவாளர் “கலைமாமணி” கனகசுப்பு.

எதற்கும் தகுதி வேண்டும் என்பதே நியமம்.

ஆசனம்

கோமுகாசனம்

பெயர் விளக்கம்

கோ என்றால் பசு. பசு உட்கார்ந்திருக்கும்போது அதன் முகப்புத் தோற்றத்தைப்போல இருப்பதால் இதற்கு இப்பெயர். பசுத்தலை ஆசனம் என்றும் பொருள் கொள்ளலாம்.

Story image

செய்முறை

விரிப்பின் மீது அமர்ந்துகொள்ளவும்.

கால்களை ஒன்றன் மீது ஒன்றாக மடக்கிப் போட்டுக்கொள்ளவும்.

கைகளை, படத்தில் காட்டியுள்ளபடி முதுகுக்குப் பின்பக்கமாகக் கொண்டுசென்று விரல்களைக் கோத்துக்கொள்ளவும்.

சில சுவாசங்கள் எடுக்கவும்.

பின்னர் கைகளை மெதுவாகத் தளர்த்தி, கால்களை விலக்கி அமரவும்.

கால்களை மீண்டும் மாற்றி வைத்து, கைகளை மீண்டும் மாற்றி முன்போலவே பின்பக்கமாகக் கொண்டுசென்று, முதுகோடு ஒட்டினாற்போல் வைத்துக்கொண்டு சுவாசிக்கவும்.

சிறிது நேரத்துக்குப் பிறகு இயல்பு நிலைக்கும் திரும்பி ஓய்வு எடுக்கவும்

பலன்கள்

இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களிலும் இதயத்திலிருந்து வெளிவரும் ரத்த நாளங்களிலும் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடும்.

இதய அடைப்புகள் நீங்கும்.

மார்பு விரிவடைவதால் நிறைய காற்றை உள்ளிழுக்க முடியும்.

கால்களை மாற்றி மாற்றி அமைப்பதால், சித்தம் தெளிவடையும். சித்தர்கள் அமரும் ஆசனம் என்பதால், மன ஒருமைப்பாடு ஏற்படும்.

வீடியோ - மரியா, ஸ்லோவோக்கியா (ஆசனா ஆண்டியப்பன் யோகா மையம்)
படம் - ப்ரியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.