மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாராக் கடனும், வசூல் முறையும்

அண்மைக் காலமாக, நிதி அமைச்சர் பொதுத் துறை வங்கிகளில் வாராக் கடன் நிறைய தேங்குவது குறித்துத் கவலை தெரிவித்திருக்கிறார்; ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும் இத்தகைய கடனைப் பற்றிக் கருத்து சொல்லியிருக்கிறார்.

News image
Updated On :9 பிப்ரவரி 2014, 9:35 pm

அண்மைக் காலமாக, நிதி அமைச்சர் பொதுத் துறை வங்கிகளில் வாராக் கடன் நிறைய தேங்குவது குறித்துத் கவலை தெரிவித்திருக்கிறார்; ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும் இத்தகைய கடனைப் பற்றிக் கருத்து சொல்லியிருக்கிறார். சில நாள் முன் இந்திய வர்த்தக சபையின் கூட்டமைப்பு (அசோசேம்) தங்கள் கோணத்தில் பார்த்து இதற்கான காரணங்களை கூறியிருக்கிறது. பொதுத் துறை வங்கிகளில் குவிந்துள்ள வாராக் கடன் பற்றி ஓர் அச்சம் பலரிடம் எழுவதே வரவேற்கத்தக்க அம்சம்தான் என்று சொல்லலாம்.

நடுத்தர வாடிக்கையாளர்கள் இதுகுறித்து என்ன எண்ணுகிறார்கள்? ""ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் சில வகைக் கடனுக்கு மானியம் கிடைத்து விடுகிறது. முழுக்க செலுத்த முடியாமல் போனால், அரசு அனுமதியுடன் ரத்து செய்கிறார்கள். கோடிக் கணக்கில் கடன் பெறும் தொழில் நிறுவனங்களுக்கு அரசு துணை போகிறது. பத்து இருபது லட்சம் கடன் பெறும் இடைப்பட்டவர்கள்தான் அவதிக்குள்ளாகிறார்கள்'' என்பதே அவர்கள் நினைப்பு.

மேற்சொன்ன மனப்போக்கைத் தவறென்று ஒதுக்கித் தள்ள முடியாது. ஆனால் அதுவே முழு உண்மையுமில்லை, பல அரசு வங்கிகள் 2002ஆம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை அமலாக்கச் சட்டப்படி, கடனைத் திருப்பிச் செலுத்தாத கடன்தாரர்களின் பெயரையும் விலாசத்தையும் தின ஏடுகளில் வெளியிடுவது, அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு சான்று. ஆக, கோடிக் கணக்கில் கடன் பெறுபவர்களை வங்கி ""விட்டு விடுகிறார்கள்'' என்ற கருத்து சரியில்லை. ஒரு விஷயம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட கால் நூற்றாண்டு காலம் வரை, வங்கிகள் வசூலைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை.

1994இல் உலக வங்கி பொது வங்கிகளின் தரத்தை நிர்ணயம் செய்ய வாராக் கடனை கணக்கில் எடுத்துக் கொண்ட போதுதான் அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் வாராக் கடனை சீரமைப்பதற்கு பல விதிகளைக் கொணர்ந்தார். அதன் தொடர்ச்சிதான் 2002இல் இயற்றப்பட்ட சட்டம், வசூல் தீர்ப்பாணையம் போன்றவை.

பொதுவாகக் கடன்கள் தேங்கி நிற்பதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம்.

1. அரசு கொள்கைகளில் மாறுதல்; இயற்கை உற்பாதம்.

2. நிபந்தனைகளை வங்கி முறையாகப் பின்பற்றாமை.

3. வேண்டுமென்றே கடனைச் செலுத்தாத பிரிவினர். (ரண்ப்ச்ன்ப் க்ங்ச்ஹன்ப்ற்ங்ழ்ள்). முதல் அம்சம் முக்கியமாகத் தொழில் கடனிலும் (ஐய்க்ன்ள்ற்ழ்ண்ஹப் கர்ஹய்ள்); ஏற்றுமதி இறக்குமதி கடன் வகைகளிலும் டங்கும். சிற்சில மூலப் பொருட்கள் மீதான வரியைக் கூட்டுவது அல்லது குறைப்பது; இறக்குமதி செய்வதில் திடீரென்று புதிய விதிகளைக் கொண்டு வருவது - இவை போன்ற சில மாற்றங்களினால் தொழிலதிபர்கள் பாதிக்க நேரிடலாம். அப்போது தவணை முறைப்படிக் கடனைச் செலுத்த இயலாத சூழல் ஏற்படலாம்.

இரண்டாவது காரணி - நிபந்தனைகளை முற்றுமாகப் பின்பற்றாததுதான். கடனாளியின் கையெழுத்தை சில படிவங்களில் பெற விட்டுப் போவது; கடன் கொஞ்சம்தான் பாக்கி என்ற நினைப்பில், சில பத்திரங்களைத் திருப்பிக் கொடுப்பது போன்றவை. இன்றைய சூழலில் இதுபோல் நிகழ்வதற்கானச் சாத்தியக் கூறுகள் மிகக் கம்மி.

திட்டமிட்டு கடனைச் செலுத்தாத கடன்தாரர்களால்தான், வாராக் கடன் உயரக் காரணமாகிறது. அரசியல்வாதிகளின் தலையீடு; அடமானம் கொடுக்கப்பட்ட வாகனத்தை வேறு மாநிலத்துக்குக் கொண்டு போவது; மிக மிகச் சின்ன தவறுகளில் புகுந்து கொண்டு (உ.ம்:- இறுதி நோட்டீஸ் எழுத்து பூர்வமாகத் தரப்படவில்லை) வழக்குரைஞர் துணையுடன் வாதாடித் தாமதிப்பது - போன்ற பல வகைகள் இதில் அடக்கம், மேலதிகாரிகளுக்கும் கடன்தாரர்கலுக்குமிடையே நிலவுகிற ""முறையற்ற இணக்கத்தையும்'' இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இங்கு வேறு ஒரு விஷயத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்: இறுதிக்கட்டத்தில், அடமானம் தரப்பட்ட பொருளைக் கையகப்படுத்துவதிலுள்ள சிக்கல், கடனுக்குப் பிணையாக நிலமிருந்தால், ஏலம் விடுகிறபோது, ஊர்ப் "பெரிய மனிதருக்கு'ப் பயந்து, பலரும் பேசிக் கொண்டு குறைவான தொகையே கேட்கிறார்கள் என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். லாரி, டிராக்டர் போன்ற பெரிய வாகனங்களைப் பறிமுதல் செய்தால், அவற்றைப் பாதுகாப்பது ஒரு பிரச்னை. யந்திரமென்றால், அவை இயங்காத நிலையில் சீர்கெட்டுப் போகும் நிலை. இத்தகைய யதார்த்தமான சிக்கல்கள் பல உள்ளன.

இன்றைய கணினி வரவினால் பல சாதக அம்சங்கள் இருப்பது உண்மையே. தனி நபர் கடனில் - ஒரு லட்ச ரூபாயைத் தாண்டினால் - "ஸ்பி' என்கிற வலை தளத்தில் இடம்பெறும். நபரின் டஅச எண்ணை வைத்து, பிற வங்கிகளில் கடன் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். முன்போல் வட்டியைச் சரிபார்ப்பது, புத்தகங்களை மாதாமாதம் "சமனப்படுத்தும் விதம்' (பேலன்ஸிங்) போன்ற பல வேலைகள் அதிகாரிகளுக்குக் கிடையாது. அதேசமயம் ஆள் பற்றாக்குறை இருப்பதுடன், வருமான வரி, மைய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் போன்ற பல வேலைச் சுமைகள் இப்போது உள்ளன.

தனியார் வங்கிகளைப் பற்றி இங்கு கூறவில்லை. அவர்கள் வசூல் செய்கிற விதமே தனி. வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தனியார் வங்கியின் பாஸ் புத்தகம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்கிற செய்தியை வைத்தே - அவை இயங்கும் தன்மையை ஊகிக்கலாம். வங்கிகள்தான் நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு. அந்த வங்கிகள், வாராக் கடனால், தரம் குறைவது நல்லது அல்ல. வங்கித் தலைவர்கள்; யூனியன்; ரிசர்வ் வங்கி - எல்லாருமாகச் சேர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.