சரணம் ஐயப்பா - விமரிசனம்

வழக்கமான லீலா வினோதங்களைக்காட்டாமல் ஐயப்பன்மார்களுக்கு ஏற்படும் அனுபவங்களைக் காட்டியிருப்பது
சரணம் ஐயப்பா - விமரிசனம்
Updated on
1 min read

வழக்கமான லீலா வினோதங்களைக்காட்டாமல் ஐயப்பன்மார்களுக்கு ஏற்படும் அனுபவங்களைக் காட்டியிருப்பது பாராட்டத் தக்கது.

சபரிமலைக்குப் போக முடியவில்லையே என்கிற குறை தீருகிற வகையில் ஒரு யாத்திரை போய் வந்த உனர்ச்சி ஏற்படுகிறது. அதற்கிடையில் ஒரு திருடர்கள் கதை. திருட்டுக் கதை அல்ல!

சிறையிலிருந்து தப்பிச் செல்லும் மூன்று கைதிகள், சபரிமலை செல்லும் ஐயப்பன்மார்களுடன் கலந்து போலீஸ் கண்ணை மறைக்க முயற்சிக்கிறார்கள். முடிவு, ஐயப்பனின் விஸ்வரூப தரிசனம்!

பயணத்துடனேயே கதையும் தடையின்றித் தொடருகிறது. எடிட்டரைத் தட்டிக் கொடுக்கலாம்.

மூன்று கைதிகளில் முதலிடம் பெறுபவர் பூபதி. அடிக்கடி வெளியே போய்விட்டுத் திரும்ப வந்து போலீஸில் அடைக்கலம் புகும் அடைக்கலமாக அட்டகாசம் செய்திருக்கிறார் அவர். ரவிராஜும் மோகனும் வழக்கமான வில்லன்கள்.

ஜீ.சீனிவாசன் வடிவில் நிஜமான குருக்களைக் காண்கிறோம்.

மற்றபடி மாபெரும் நடிகர்கள் எல்லாம் தலையைக் காட்டியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அவர்கள் எல்லாம் தன்னைத் துணை நடிகராகிஅ வைத்திருந்த காரணத்தினால் தானோ என்னவோ, டைரக்டர் தசரதன் தற்போது அவர்களைத் துணை ஆக்கிவிட்டார்.

ஆனாலும் தக்க துணை சுவாமி ஐயப்பன்.

-கேயெம்மெஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com