மறைந்த நடிகர் முத்துராமன் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி பெங்களூர் சென்று அங்கிருந்து ஊட்டிக்கு புறப்படுவதற்கு முன்பு, கதாசிரியர் கலைஞானத்திற்கு போன் செய்தார்.
கலைஞானத்தின் பைரவி பிலிம்ஸ் "இளஞ் ஜோடிகள்" படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.
அலைகள் ஓய்வதில்லை படத்திற்குப் பிறகு கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் படம் இது. படப்பிடிப்பு நடைபெறும் படமும் இது.
அக்டோபர் 20-ஆம் தேதி பிரசாத் ஸ்டூடியோவில் "இளஞ் ஜோடிகள்" படப்பிடிப்பு துவங்க வேண்டும். அனால் அன்று முத்துராமன் ஊரில் இல்லாததாள், கலைஞானத்திற்கு போன் செய்து அதை தெரிவிக்க விரும்பினார்.
போனில் முத்துராமன் கலைஞானத்திடம "பையனை முழுக்க முழுக்க உங்களை நம்பி ஒப்படைக்கிறேன். அவனை நல்ல முறையில் பயன்படுத்தி, நல்ல பெயரை வாங்கித் தந்து, பெரும் புகழும் கொண்டவனாக உருவாக்குவது உங்கள் கடமை.
கராத்தே மணியிடம் சொல்லி பையனுக்கு நல்ல கராத்தே பயிற்சி அளிக்கச் சொல்லுங்கள். டைரக்டர் இராம நாராயணனிடமும் என் பையனை நல்ல முத்திரையில் தயார் பண்ண நான் கேட்டுக் கொண்டதாக சொல்லுங்கள். நானும் போன் செய்து கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் படப்பிடிப்பு துவங்கும் 20-ஆம் தேதி நான் ஊரில் இல்லை. 21ஆம் தேதி என் வேலை முடிந்து 22-ஆம் தேதி கண்டிப்பாக வருகிறேன்" என்று கூறினார்.
அவர் கூறியபடியே 22-ஆம் தேதி சென்னை வந்தார். ஆனால் உயிரற்ற சடலமாகத்தான் வந்தார் என்று கண்ணீர் மல்க கலைஞானம் கூறினார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடு
ஜன நாயகனுக்குத் தணிக்கைச் சான்று?
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


