ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 25 – ஆசைப் பத்து - 4

உன்னை என் கைகளால் வணங்கி, உன்னுடைய திருவடிகளைத் தழுவிக்கொண்டு, தளர்ச்சியில்லாமல் அவற்றை என் தலைமேல் வைத்துக்கொண்டு ‘எம்பெருமானே!

News image
Updated On :10 டிசம்பர் 2015, 12:11 pm

என். சொக்கன்

இறைவன்மேல் தான் வைத்துள்ள ஆசையை விவரித்துத் தனக்கு அருளுமாறு வேண்டும் பாடல்கள் இவை. பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

157

பாடலின்பம்

பாரோர், விண்ணோர் பரவி

ஏத்தும் பரனே, பரஞ்சோதீ,

வாராய், வாரா உலகம்

தந்து வந்துஆட்கொள்வோனே,

பேர்ஆயிரமும் பரவித்

திரிந்து எம்பெருமான்என ஏத்த

ஆரா அமுதே, ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே.

*

கையால் தொழுது, உன் கழல்சேவடிகள்

கழுமத் தழுவிக்கொண்(டு)

எய்யாதுஎன்றன் தலைமேல்

வைத்து எம்பெருமான், பெருமான்என்(று)

ஐயா, என்றன் வாயால்

அரற்றி அழல்சேர் மெழுகுஒப்ப

ஐயாற்றுஅரசே, ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே.

பொருளின்பம்

இந்த உலகில் வாழ்பவர்களும் தேவர்களும் பாராட்டிப் போற்றும் சிறந்தவனே, மேலான சுடரொளியே, திரும்பிவராத மோட்ச உலகத்தைத் தந்து ஆட்கொள்பவனே, தெவிட்டாத அமுதமே, அம்மானே,

சிவபெருமானே, நீ இங்கே வரவேண்டும், உன்னுடைய ஆயிரம் திருப்பெயர்களையும் சொல்லித் திரிந்தபடி, ‘எம்பெருமான்’ என உன்னை வணங்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், அதனை நீ அறிந்து அருள்செய்.

*

திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் அரசே, அம்மானே,

உன்னை என் கைகளால் வணங்கி, உன்னுடைய திருவடிகளைத் தழுவிக்கொண்டு, தளர்ச்சியில்லாமல் அவற்றை என் தலைமேல் வைத்துக்கொண்டு ‘எம்பெருமானே! எம்பெருமானே!’ என்றும் ‘ஐயா!’ என்றும் வாயால் அரற்றி, நெருப்பைச் சேர்ந்த மெழுகுபோல் மனம் உருகவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், அதனை நீ அறிந்து அருள்செய். 

சொல்லின்பம்

பாரோர்: உலகில் உள்ளவர்கள்

பரவி ஏத்தும்: புகழ்ந்து போற்றும்

பரனே: சிறந்தவனே

பரஞ்சோதீ: சிறந்த சுடரொளியே

வாரா உலகம்: திரும்பிவராத உலகம்/ மோட்சம்

ஆரா அமுதே: தெவிட்டாத அமுதமே

கழல்சேவடிகள்: கழல் என்கிற, ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணத்தைக் கொண்ட சிவந்த/ சிறந்த திருவடிகள்/ சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

கழும: பொருந்த

எய்யாது: தளராது

அழல்: நெருப்பு

ஒப்ப: போல

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.