ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 27 – புணர்ச்சிப் பத்து - 3

சிறந்து விளங்குகின்ற எம்பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண்பதற்காக, திருமால் கீழே பூமியை அகழ்ந்தான், பிரம்மன் மேலே பறந்தான், ஆனால், அவர்களால் அந்த அம்மானைக் காண இயலவில்லை,

News image
Updated On :21 டிசம்பர் 2015, 5:44 am

என். சொக்கன்

புணர்ச்சி என்றால் சேர்தல் என்று பொருள். திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் சேர வேண்டும் என்று விரும்பிப் பாடிய பாடல்கள் இவை.

பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.

166

பாடலின்பம்

திகழத்திகழும் அடியும் முடியும்

காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்

அகழப் பறந்தும் காணமாட்டா

அம்மான், இம்மாநிலம்முழுதும்

நிகழப் பணிகொண்டு என்னைஆட்கொண்டு

ஆ!ஆ! என்ற நீர்மைஎல்லாம்

புகழப்பெறுவதுஎன்றுகொல்லோ என்

பொல்லா மணியைப் புணர்ந்தே.

*

பரிந்துவந்து பரமானந்தம்

பண்டே அடியேற்குஅருள்செய்யப்

பிரிந்துபோந்து பெருமாநிலத்தில்

அருமால்உற்றேன் என்றுஎன்று

சொரிந்த கண்ணீர் சொரிய, உள்நீர்

உரோமம்சிலிர்ப்ப, உகந்துஅன்பாய்ப்

புரிந்துநிற்பதுஎன்றுகொல்லோ என்

பொல்லா மணியைப் புணர்ந்தே.

பொருளின்பம்

சிறந்து விளங்குகின்ற எம்பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண்பதற்காக, திருமால் கீழே பூமியை அகழ்ந்தான், பிரம்மன் மேலே பறந்தான், ஆனால், அவர்களால் அந்த அம்மானைக் காண இயலவில்லை,

அப்படிப்பட்ட பெருமான், இந்தப் பெரிய உலகமே அறியும்படி என்னைத் தன் அடிமையாக்கி ஆட்கொண்டான், அந்தச் சிவபெருமானின் தன்மைகளை நான் புகழ்வது எப்போது? அந்தத் துளையில்லாத மாணிக்கத்தை நான் சேர்கின்ற நாள் எப்போது?

*

எம்பெருமான் முன்பே தானாக வலியவந்து அன்போடு எனக்குப் பரமானந்தத்தை அருளினான். ஆனால், நான் அவனைப் பிரிந்துசென்றேன், இந்தப் பெரிய உலகத்தில் அரிய மயக்கத்தை அடைந்தேன்,

இதையெல்லாம் சொல்லி, கண்களிலிருந்து நீர் விடாமல் சொரிந்துகொண்டிருக்க, உள்ளம் நெகிழ, மயிர்க்கால்கள் சிலிர்க்க, அன்போடு அவனை விரும்பி, சிவபெருமானின் பெருமையை நான் புரிந்துகொள்வது எப்போது? அந்தத் துளையில்லாத மாணிக்கத்தை நான் சேர்கின்ற நாள் எப்போது?

சொல்லின்பம்

திகழத்திகழும்: மேம்பட்டுத் திகழும்

அயன்: பிரம்மன்

காணமாட்டா: காணஇயலாத

இம்மாநிலம்: இந்தப் பெரிய நிலம்

நிகழ: தெரிந்துகொள்ளும்படி

பணிகொண்டு: அடிமையாக்கி

நீர்மை: தன்மை

பொல்லா மணி: துளையில்லாத மாணிக்கம்

பரிந்துவந்து: அன்புடன் தானே வந்து

பண்டே: முன்பே

பிரிந்துபோந்து: பிரிந்துசென்று

அருமால்: அரிய மயக்கம்

உகந்து: மகிழ்ந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.