பகுதி 1. சிவபுராணம்-1
திருப்பெருந்துறையில் அருளியது. 95 அடிகளைக் கொண்ட ஒரே பாடல். கலி வெண்பா என்ற வகையில் அமைந்தது.


திருப்பெருந்துறையில் அருளியது. 95 அடிகளைக் கொண்ட ஒரே பாடல். கலி வெண்பா என்ற வகையில் அமைந்தது.
இந்தப் பாடலிலிருந்து ஏழு பகுதிகளை இந்த வாரம் காண்போம்!
பாடலின்பம்
நமச்சிவாய வாஅழ்க, நாதன் தாள் வாழ்க,
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,
கோகழி ஆண்ட குரு மணி தன் தாள் வாழ்க,
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க,
ஏகன், அநேகன் இறைவன் அடி வாழ்க!
பொருளின்பம்
நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் வாழ்க,
எங்கள் நாதனாகிய இறைவனின் திருவடிகள் வாழ்க,
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காது வாழ்பவனின் திருவடிகள் வாழ்க,
திருக்கோகழி என்ற திருத்தலத்தை ஆளுகின்ற சிறந்த குருவாகிய மாணிக்கத்தின் திருவடிகள் வாழ்க,
ஆகமங்களாக நின்று இனிப்பவனின் திருவடிகள் வாழ்க,
ஒரே நேரத்தில் ஒருவனாகவும் பலராகவும் நிற்கின்ற சிவபெருமானின் திருவடிகள் வாழ்க!
சொல்லின்பம்
* மணி: மாணிக்கம்
* அண்ணித்தல்: இனித்தல்
* ஏகன்: ஒருவன்
* அநேகன்: பலரானவன்
* தாள்: கால்/ திருவடிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...