ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 10 - திருக்கோத்தும்பி - 1

‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை.

News image
Updated On :11 செப்டம்பர் 2015, 12:09 pm

என்.சொக்கன்

‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை. மலரைச் சேர்வதுபோல் சிவபெருமானின் திருவடிகளைச் சேருமாறு வண்டுக்கும், அதன்மூலம் பக்தர்களுக்கும் சொல்பவை.

தில்லையில் எழுதப்பட்ட இருபது பாடல்களைக் கொண்ட பகுதி இது.

65

பாடலின்பம்

பூஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த

நாஏறு செல்வியும் நாரணனும் நான்மறையும்

மாஏறு சோதியும் வானவரும் தாம்அறியாச்

சேஏறு சேவடிக்கே சென்றுஊதாய், கோத்தும்பீ!

*

நான்ஆர், என் உள்ளம்ஆர், ஞானங்கள்ஆர், என்னை ஆர்அறிவார்,

வானோர்பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி!

ஊன்ஆர் உடைய தலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேன்ஆர் கமலமே சென்றுஊதாய், கோத்தும்பீ!

பொருளின்பம்

தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் பிரம்மன், இந்திரன், அழகிய கலைமகள், நாராயணன், நான்கு வேதங்கள், சிறந்த சூரியன், சந்திரன், அக்னி ஆகிய சுடர்கள், தேவர்கள் என இவர்கள் யாராலும் காளைவாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானின் திருவடிகளை அறிய இயலாது, கோத்தும்பியே, நீ அங்கே சென்று ரீங்காரம் செய்!

வானோர் தலைவனான சிவபெருமான் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால், நான் யார்? எனக்கேது உள்ளம்? எனக்கேது ஞானம்? என்னை யார் அறிவார்கள்? என்னை யார் மதிப்பார்கள்?

கோத்தும்பியே, மாமிசம் ஒட்டிய மண்டையோட்டில் பிச்சை பெற்று உண்கிறவன், அந்தச் சிவபெருமானின் தேன் சொட்டும் தாமரைத் திருவடிகளில் சென்று ரீங்காரம் செய்!

சொல்லின்பம்

கோன்: தலைவன்

புரந்தரன்: இந்திரன்

பொற்பு: அழகு

மறை: வேதம்

மா: சிறப்பு

சே: காளை

சேவடி: சிவந்த திருவடி/ செம்மையான திருவடி

கோ: தலைவன்

தும்பி: வண்டு

பிரான்: தலைவன்

மதி: புத்தி

ஊன்: மாமிசம்

பலி: பிச்சை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.