ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 43 – திருவார்த்தை - 1

இறைவனின் தன்மைகளைச் சொல்லும் மேலான வார்த்தை என்ற பொருளில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

News image
Updated On :29 பிப்ரவரி 2016, 5:37 am

என். சொக்கன்

இறைவனின் தன்மைகளைச் சொல்லும் மேலான வார்த்தை என்ற பொருளில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு.

238

பாடலின்பம்

மாதுஇவர்பாகன், மறை பயின்ற வாசகன், மாமலர் மேய சோதி,

கோதுஇல் பரம்கருணை, அடியார் குலாவு நீதி குணமாக நல்கும்

போதுஅலர் சோலைப் பெருந்துறை எம் புண்ணியன், மண்இடை வந்துஇழிந்து

ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள்அறிவார் எம்பிரான்ஆவாரே.

*

மால், அயன், வானவர்கோனும் வந்து வணங்க அவர்க்குஅருள் செய்த ஈசன்,

ஞாலம் அதன்இடை வந்துஇழிந்து நல்நெறி காட்டி நலம் திகழும்

கோல மணிஅணி மாட நீடு குலாவும் இடவை மடநல்லாட்குச்

சீலம் மிகக் கருணைஅளிக்கும் திறம்அறிவார் எம்பிரான்ஆவாரே.

பொருளின்பம்

உமையம்மையைத் தன் உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவன், வேத மொழி சொல்கிறவன், அன்பர்களின் மனம் என்கிற சிறந்த மலரில் அமர்ந்த சோதி வடிவானவன், குற்றமில்லாத, உயர்ந்த கருணையைப் பொழிகிறவன், பக்தர்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதற்கான நல்வழியை அவர்களுக்கு அருள்கிறவன், மலர்கள் விரிந்து மணம் வீசுகிற சோலைகள் நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் நம் புண்ணியன், சிவபெருமான்,

அவன் இந்தப் பூமியில் வந்து, ஆதிப் பரம்பொருளை நமக்குக் காட்டினான், அவனது அருள்தன்மையை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!

*

திருமாலும் பிரம்மனும் விண்ணவர்களின் தலைவனான இந்திரனும் வந்து சிவபெருமானை வணங்கினார்கள், அவன் அவர்களுக்கு அருள் செய்தான்,

நமக்காக, அவன் பூமிக்கு வந்தான், நல்ல நெறியை நமக்குக் காட்டினான்,

நன்மைகள் திகழுகின்ற, அழகு நிறைந்த, மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மாடங்கள் உயர்ந்து விளங்குகிற திருவிடைமருதூரில், ஓர் இள மங்கைக்கு (வரகுண பாண்டியனின் மனைவி) நல்லொழுக்கங்கள் மிகுந்திருப்பதை உணர்ந்து, அவளுக்குக் கருணை காட்டினான்.

அத்தகைய பெருமானின் தன்மையை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!

சொல்லின்பம்

மாதுஇவர்பாகன்: பெண் (உமையம்மை) பொருந்திய உடலைக் கொண்டவன் / சிவபெருமான்

மறை பயின்ற வாசகன்: வேதம் சொல்லும் சொற்களைக் கொண்டவன்

மாமலர் மேய சோதி: உயர்ந்த மலரிலே எழுந்தருளியிருக்கும் சோதிவடிவானவன்

கோதுஇல் பரம்கருணை: குற்றமில்லாத, உயர்ந்த கருணை

குலாவு: போற்றுகிற

நல்கும்: வழங்கும்

போது அலர்: மலர்கள் விரிகிற / மணம் வீசுகிற

பிரான்: தலைவன்

அயன்: பிரம்மன்

கோன்: தலைவன்

ஞாலம்: உலகம்

கோலம்: அழகு

இடவை: திருவிடைமருதூர்

சீலம்: ஒழுக்கம்

திறம்: தன்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.