சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 57

வலன் என்ற அசுரனைக் கொன்றதால் இந்திரனுக்கு வலாரி என்று பெயர். முரன் அல்லது முராந்தகன்

Updated On :7 நவம்பர் 2015, 9:08 am

‘சிலா’ முதலான சில சொற்கள் திரும்பத் திரும்ப வந்து ஒவ்வோரிடத்திலும் பொருள் வேறுபடுவன. இங்கே சொற் குறிப்புகளையும், விவரங்களை விளக்கத்திலும் பார்க்கவும்.

பதச் சேதம்

சொற் பொருள்

வலாரி அலல் ஆகுலம் இலாது அகலவே; கரிய மால்

வலாரி: இந்திரன், அலல்: அல்லல், ஆகுலம்: கலக்கம்

கரிய மால்: திருமால்

அறியும் நாலு மறை நூல் வலான்நாலுமறை அறியும் நூல் வலான்: நான்கு வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்லவனாகிய பிரமன்
அலைவுஇலான் நசிவுஇலான் மலைவிலான்

அலைவிலான்: அலைவுறாதவன்

நசிவிலான்: அழிவில்லாதவன்

இரண்டு பொருள். மலைவு இலான்: மலைவு: மாறுபாடு, மயக்கம் இல்லாதவன். (அல்லது) மலை விலான்: மேரு மலையை வில்லாக ஏந்தியவன் (மூன்றும் பரமசிவனைக் குறிப்பன)

இவர் மநோலய உலாசம் உறவேஇவர்கள் எல்லோரும் மனம் லயித்து உல்லாசம் (மகிழ்ச்சி) அடையுமாறு
உலாவரு கலோலம் மகர ஆலய சலங்களும் உலோக நிலை நீர் நிலை இலா

கலோலம்: கல்லோலம்= அலை

மகர=சுறா முதலான பெரிய மீன்கள், மகராலயம்: கடல், உலோக: உலக

ஒலா ஒலி நிசாசரர் உலோகம் அது எலாம் அழல் உலாவிய நிலாவிய கொலைவேல்ஒலாஒலி: நாராசமான ஓசை, நிசாசரர்: நிசியில் உலவுபவர்கள், அசுரர்.
சிலா வட கலா விநொதவா சிலி முகா விலொசனா சின சிலா தணி விலாசிலா: மலை (இடத்துக்கேற்ப எந்த மலை என்பது மாறுபடும்). இங்கே வடசிலா: வடக்கே உள்ள கந்தமாதன பர்வதத்தில், சிலிமுக: வண்டு (இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். விளக்கத்தில் காணவும்) விலோசனா: விலோசனம்—பார்வை, sight, சின சிலா தணி: சிறிய (சின்ன) மலையான தணிகை, விலா: வில்லை உடையவா
சிலா மலர் எலாம் மதியம் மோதி மதி சேல் ஒழிய சேவக சராப முகில் ஆம்சிலா மலர் எலாம் மதியம் மோதி, மதி சேல் ஒழிய, சேவக சிலா (என்று அன்வயப்படுத்திக் கொள்ளவும்). சராப முகில்: திருமாலைக் குறிக்கிறது
விலாச கலியாண கலை சேர பசு மேலை முலை மேவிய விலாச அகலன்விலாசமான, மங்களகரமான கலை: மான்—திருமகள். பசு: ஆன்மாவாகிய வள்ளி; மார்பகத்தைத் தழுவிய பரந்த மார்பை உடையவன். அகலம்: மார்பு, அகலன்: மார்பை உடையவன்.
விலாழியினில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு வேழம் இளைஞன் கை வேலே.விலாழி என்றால் குதிரையின் வாயில் பெருகும் நுரையென்றும், யானை துதிக்கையால் பீய்ச்சும் நீரென்றும் இரண்டு பொருளுண்டு. இங்கே பின்னதைக் கொள்கிறோம். கடலை உறிஞ்சி வானில் துதிக்கையால் பீய்ச்சி அனலைக் குளிர்வித்தவனான விநாயகனின் இளவலான முருகனுடைய கையிலுள்ள வேலே அது.

பதவுரை

வலாரி ... இந்திரன் (இந்திரனுடைய)

(வலன் என்ற அசுரனைக் கொன்றதால் இந்திரனுக்கு வலாரி என்று பெயர். முரன் அல்லது முராந்தகன் என்ற அசுரனைக் கொன்ற திருமாலுக்கு முராரி என்றும், திரிபுரங்களை எரித்ததால் சிவனுக்குப் புராரி என்றும் பெயர் இருப்பதைப் போல இவன் வலாரி)

அலல் ... அல்லல் (அதாவது) துன்பங்களையும்

ஆகுலம் ... மனக் கலக்கத்தையும்,

இலாது அகலவே ... இல்லாதபடி அகற்றும்படியும்,

கரிய மால் ... மேக வண்ணனாகிய திருமாலும்,

அறியும் நாலுமறைநூல் வலான்... நான்கு வேதங்களையும் சாத்திர நூல்களையும் அறிந்தவனும் அவற்றில் வல்லவனுமான பிரமனும்,

அலைவு இலான் ... அலைவு அல்லது அசைவில்லாதவன் (அசலமானவன்)

நசிவு இலான் ... அழிவு இல்லாதவன்,

மலை விலான் ... (திரிபுரங்களை அழிக்க மேரு) மலையை வில்லாக வளைத்தவன் (அல்லது) மலைவு இலான்: மாறுபாடு, மயக்கம் இல்லாதவன்—ஆகிய (மூன்று தன்மைகளுக்கும் உரிய) சிவனும்

இவர் ... ஆகிய இவர்களுடைய (அதாவது இந்திரன், திருமால், பிரமன், பரமசிவன் ஆகியோருடைய)

மநோலயம் உலாசம் உறவே ... மனங்கள் லயிக்கப்பெற்று உல்லாசம் (மகிழ்ச்சியை) அடையும்படியாக,

உலா வரு ... புரண்டு வரும்,

கலோல ... அலைகள் (நிறைந்ததான),

மகர ஆலயம் ... மகர மீன்களுக்கு இருப்பிடமான கடலின்,

உலோக நிலை நீர் நிலையிலா .. உலகநிலை, நீர்நிலை இலா.

அதாவது தரையிலும் தண்ணீரிலும் வாழும் எல்லா உயிரினங்களும் இல்லாது அழியும்படியாக,

ஒலா ஒலி ... நாராசமான பேரொலியை எழுப்பிக்கொண்டு (போரிட்ட),

நிசாசரர் ... அசுரர்கள்,

உலோகமெலாம் ... வாழ்கின்ற உலகங்கள் எல்லாவற்றிலும்,

அழல் ... நெருப்பு,

உலாவிய நிலாவு ... பரவும்படி உலாவி வந்த,

கொலை வேல் ... கொடிய கொலைகளை செய்த வேல்

இந்திரன், பிரமன், திருமால், பரமசிவன் ஆகிய எல்லோரும் மகிழும்படியாக,

நாராசமான ஓசைகளை எழுப்பிக்கொண்டு போருக்கு வந்த அசுரர்கள் வாழும் உலகங்கள் எல்லாவற்றிலும் நெருப்பு பரவும்படியாகத் திரிந்து, கொடிய கொலைகளைச் செய்தது இந்த வேல்.

(இந்த வேல் யாருடையது என்று கேட்டால்)

சிலா வட (வட சிலா) கலா விநோதவா சிலிமுகா... இதை இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம். வடசிலா என்பதைச் சிலாவட என்று மாற்றிப் போட்டுக் கொண்டால் வடக்கே உள்ள மலையான கந்தமாதன பர்வதத்தில், எல்லாக் கலைகளிலும் வல்லவனாகி (கலா விநோதவா) இருப்பவனும், சிலிமுகா (வண்டு) வண்டின் உருவத்தைக் கொண்டவனும் என்று சொல்லலாம்.

மாறாக

சிலாவட என்பதை அப்படியே வைத்துக்கொண்டால், சிலா: மலைகளைத் (தன் இருப்பிடமாகக் கொண்டவனும்) வடகலா விநோத: வடமொழியில் பிரியமுடையவனும் என்றும் பொருள்கூற இடமுண்டு.

விநோதவா சிலிமுகா என்பதை, விநோதவா என்று பிரிக்காமல், விநோத ஆசிலி முகா என்று பிரித்தால், வல்லவனே, மாசற்ற (ஆசு இலி) முகத்தை உடையவனே என்று பொருள் தரும். வாரியார் சுவாமிகள் இந்தப் பொருளைத்தான் கொண்டிருக்கிறார்.

அதாவது, எல்லாக் கலைகளிலும் வல்லவனாக, கந்தமாதன பர்வதத்தில் வீற்றிருப்பனும், (எல்லா மலைகளிலும் குடியிருப்பவனும் என்றும் பொருள்படும்) மாசற்ற முகம் கொண்டவனும்,

விலோசனா ... (கருணை ததும்பும்) பார்வை கொண்டவனும்

சின சிலா தணி ... சிறியதாகிய தணிகை மலையில் (வீற்றிருப்பவனும்),

விலா ... வில்லேந்திய வேலனும்,

மலர் எலாம் ... சோலையிலுள்ள மலர்களெல்லாம்,

மதிய மோதி ... சந்திரன்மேல் உரசி,

மதி சேல் ஒழிய ... சந்திரனில் உள்ள (சேல்) மீன்களை போன்ற
களங்கம் அழியும்படி

சேவக ... வீரத்தை வெளிப்படுத்திய போர் வீரனும்,

(கருணாகடாட்சத்தைக் கொண்டவனும், தணிகையில் வீற்றிருப்பனும், வில்லை ஆயுதமாகக் கொண்டவனும், சோலையின் மலர்களெல்லாம் சந்திரன் மீது உரசி, சந்திரனிலுள்ள களங்கம் ஒழியும்படி, தன் ஆற்றலை வெளிப்படுத்தியவ[னான முருகன்],

சிலா ... வள்ளி மலையில்,

சராப முகிலாம் ... சரபத்தையும் மேகத்தையும் ஒத்தவரான திருமால்,

விலாச கலியாண ... அகன்ற மங்களகரமான,

கலை சேர ... கலைமான் உருவெடுத்த மஹா லட்சுமியை சேர,

மேலை ... முன் ஒரு காலத்தில்,

பசு ... அப்போது தோன்றிய உயிராகிய வள்ளிப் பிராட்டியின்

முலை மேவிய விலாச அகலன் ... தனபாரங்களைத் தழுவிய
அகன்ற திரு மார்புகளை உடையவனும்,

(வள்ளிமலையில் திருமாலும் திருமகளும் கொண்ட விழிப்புணர்ச்சியால் தோன்றிய வள்ளியின் தனங்களைத் தழுவிக்கொண்ட அகன்ற திருமார்பைக் கொண்டவன்)

விலாழியினில் ... தனது துதிக்கையைக் கொண்டு உமிழ்கின்ற நீரால்,

ஆழி ... கடலிலும்,

அகல் வானில் ... பரந்த வானத்திலும்,

அனல் ... வெப்பத்தை,

ஆரவிடு ... தணியும்படி பொழிந்த,

வேழம் ... யானைமுகக் கணபதியின்,

இளைஞன் கை வேலே ... இளையோனாகிய முருகப் பெருமானின்
கையில் உள்ள வேலாயுதமே அது.

நாராசமான ஓசைகளை எழுப்பிக்கொண்டு போருக்கு வந்த அசுரர்கள் வாழும் உலகங்கள் எல்லாவற்றிலும் நெருப்பு பரவும்படியாகத் திரிந்து, கொடிய கொலைகளைச் செய்தது இந்த வேல். இது யாருடைய வேல் என்றால்,

எல்லாக் கலைகளிலும் வல்லவனாக, கந்தமாதன பர்வதத்தில் வீற்றிருப்பனும், (அல்லது எல்லா மலைகளிலும் குடியிருப்பவனும் என்றும் பொருள்படும்) மாசற்ற முகம் கொண்டவனும், கருணாகடாட்சத்தைக் கொண்டவனும், தணிகையில் வீற்றிருப்பனும், வில்லை ஆயுதமாகக் கொண்டவனும், சோலையின் மலர்களெல்லாம் சந்திரன் மீது உரசி, சந்திரனிலுள்ள களங்கம் ஒழியும்படி, தன் ஆற்றலை வெளிப்படுத்தியவனும்,

திருமாலுக்கும் திருமகளுக்கும் வள்ளிமலையில் தோன்றியவளான வள்ளிப்பிராட்டியின் தனபாரங்களைத் தழுவிய தோளைக் கொண்டவனும்,

தன் துதிக்கையால் பீய்ச்சுகின்ற நீரால் வானத்தையும் கடல்களையும் குளிர்விக்கும் விநாயகனுடைய தம்பியுமான முருகப்பெருமானுடைய வேலே அதுவாகும்.

வேல்விருத்தம் முற்றுப் பெறுகிறது.

மயில் விருத்தத்தையும் சேவல் விருத்தத்தையும்போல வேல் விருத்தத்துக்குத் தனியாக விநாயகர் காப்பு இல்லாவிட்டாலும், முதற்பாடலிலும் கடைசிப் பாடலிலும் விநாயகரை எழுந்தருளச் செய்திருப்பது உணரத்தக்கது.

நாளை முதல் மயில் விருத்தத்தைப் பார்க்கத் தொடங்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.