சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 61

மூல முதல்வனான சிவனை வலம் வரும் அளவில்: (மாங்கனிக்காக போட்டியிட்ட சமயத்தில் சிவனை வலம்வரும் அதே அளவு நேரத்திலேயே)

Updated On :13 நவம்பர் 2015, 9:13 am

பதச் சேதம்

சொற் பொருள்

சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச் சரண யுகள அமிர்த ப்ரபாசந்தான: தேவலோக மரங்கள் ஐந்தில் ஒன்று, பரிமள: நறுமண, கிண்கிணீ முக: சதங்கையை அணிந்த, சரண: பாத, யுகள(ம்): இரண்டு, ப்ரபா: ஒளி
சந்த்ர சேகர மூஷிகா ஆருட வெகு மோக சத்ய ப்ரிய ஆலிங்கனசந்த்ர சேகர: பிறையை அணிந்த, மூஷிக: பெருச்சாளி, ஆரூட: ஏறிய, வெகுமோக: மிக்க ஆவலுடன், சத்ய: வாய்மையை, ப்ரிய: நேசத்துடன், ஆலிங்கன: தழுவுபவனும்
சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரியம்பக விநாயகன்சிந்தாமணி: நினைத்ததைத் தரும் மணி, கலச கர: கலசத்தைக் கையில் உடைய, கட: மதம் கபோலம்: கன்னம், த்ரியம்பக: முக்கண்
முதல் சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம்முதல்வனால சிவனை வலம்வரும் அளவில். அண்டங்களையெல்லாம் சுற்றி வந்த, சித்ர: அழகிய, கலாப(ம்): தோகை, தோகையை உடைய
மந்தாகிநி பிரபவ தரங்க விதரங்க வனசரோதய கிர்த்திகா வரபுத்ரமந்தாகினி: கங்கை, பிரபவ: சிறப்புடன் தோன்றிய (பவ: தோன்றுகிற, பிரபவ: சிறந்து தோன்றுகிற—சாதம், பிரசாதம் என்பதுபோல பவ, பிரபவ) தரங்க: கவலை (அலை என்பது பொதுப் பொருள். அலையாய் எழும் கவலை என்று இங்கே பொருள்) விதரங்க: பிளந்து எறியும், வனசரோதய: வனசர உதய: வனசரன் (வேடன்) உதய: தோன்றிய, கிர்த்திகா வரபுத்ர: கார்த்திகைப் பெண்களிடம் சிறந்த புதல்வனாக (வளர்ந்த)
ராஜீவ பரியங்க தந்தி அ வர அசலன்ராஜீவ(ம்): தாமரை, பரியங்கம்: கட்டில், தந்தி: பாம்பு, அ: அந்த, வர: சிறந்த, அசலன்: மலையினன் (நாகமலை என்றும் அறியப்படும் திருச்செங்கோடு—சர்ப்பகோத்ரம் என்றும் பெயர்)
குலிசாயுதத்து இந்த்ராணி மங்கில்ய தந்து ரட்சாபரண இகல் வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே.
குலிசம்: வஜ்ராயுதம், இந்த்ராணி: சசி எனப்படும் இந்திராணி, மங்கில்ய: மாங்கல்யம், தாலி, தந்து: (Tantu) சரடு, ரட்சாபரண: காத்துத் தாங்கி, இகல்: போர், விநோதன்: அழகன், க்ரீவம்: கழுத்து, நீலக்ரீவ: நீலக் கழுத்து, ரத்ன: மரகத, பச்சைமகணி, கலாபம்: தோகை

சந்தான புஷ்ப ... (தேவலோகத்தின் ஐந்து தருக்களில் ஒன்றான) சந்தான மரத்தினுடைய மலரின்

(ஐந்து தேவதாருக்கள்: கற்பகம், அரிசந்தனம், சந்தானம், பாரிஜாதம், மந்தாரம். மனத்தில் நினைத்ததைத் தருபவை)

பரிமள ... வாசம் கமழ்வதும்

(தேவர்கள் சந்தான மலராலே பாதங்களில் அர்ச்சிப்பதால் அந்த மணம் கமழ்கிறது)

கிண்கிணீ முக ... சதங்கையை அணிந்ததும்

அமிர்த ப்ரபா ... அமிர்த ஒளியை வீசுவதுமான,

சரண யுகள ... இரண்டு திரு அடிகளை உடையவரும்
(யுகள - இரண்டு),

சந்திர சேகர ... பிறைச் சந்திரனை அணிந்தவரும்,

மூஷிக ஆரூட ... மூஷிக வாகனரும்,

வெகு மோக சத்ய பிரிய ஆலிங்கன ... மிகுந்த நேசத்துடம் சத்தியத்தைத் (வாய்மை நெறியைத்) தழுவிக்கொண்டிருப்பவரும்,

சிந்தாமணி ... (அமரலோகத்து மணியான) சிந்தாமணி(யைப் போல நினைத்ததைத் தருபவரும்) (சிந்தித்ததைத் தரும் மணி சிந்தாமணி),

கலச கர ... (தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக) ரத்ன கலசத்தை திருக் கரத்தில் ஏந்தி இருப்பவரும், (விநாயகரின் துதிக்கை நுனியில் ஒரு கலசம் இருப்பதைக் காணலாம்)

கட கபோல ... மத நீர் பெருகுகின்ற கன்னங்களை உடையவரும்,

த்ரியம்பக விநாயகன் ... முக் கண்ணை உடையவருமாகிய விநாயகர்,

முதல் சிவனை வரும் அளவில் ... மூல முதல்வனான சிவனை வலம் வரும் அளவில்: (மாங்கனிக்காக போட்டியிட்ட சமயத்தில் சிவனை வலம்வரும் அதே அளவு நேரத்திலேயே),

உலகடைய நொடியில் வரு ... அண்டங்கள் அனைத்தையும் ஒரு இமைப்போதில் வலம் வந்ததான,

சித்ர கலாப மயிலாம் ... அழகிய தோகையைக் கொண்ட மயில்,

(இந்த மயில் யாருடையது என்று கேட்டால்,)

மந்தாகினி பிரபவ ... கங்கையிலே சிறப்புடன் தோன்றியவரும் (பவ, பிரபவ விளக்கங்களை மேலே பார்க்கவும்),

தரங்க விதரங்க ... (அலையலையாய்த் தொடர்ந்துவரும்) மனக் கவலைகளை பிளந்து எறிபவரும்,

வன சரோதய ... (வன+சர+உதய: வனசரன்: வேடன்) (காட்டிலே, வள்ளிக்காக) வேடன் வடிவத்தில் தோன்றியவனும் (உதித்தவனும்),

கிர்த்திகா வர புத்ர ... கார்த்திகைப் பெண்களின் சிறந்த புதல்வனும் (வர என்பதற்குச் சிறந்த என்று பொருள். வரானன என்பதற்கு அழகிய—சிறந்த—முகம் என்று பொருள்படுவது போல்),

ராஜீவ பரியங்க ... தாமரைப் பூவைத் தன் கட்டிலாக (படுக்கையாகக்) கொண்டவனும்,

தந்தி அ வர அசலன் ... நாகத்தின் வடிவமான அந்தச் சிறந்த மலையில் உறைபவனும், (நாகமலை, சர்ப்பகோத்ரம், எல்லாமே திருச்செங்கோட்டைக் குறிப்பவை)

குலிசாயுதத்து இந்திராணி ... வஜ்ராயுதத்தை ஏந்தியவனான இந்திரன் மனைவியாகிய இந்திராணியின்,

மாங்கல்ய தந்து ரட்சாபரண ... மாங்கல்ய நூலை ரட்சித்துத் தாங்கியவனும், (கந்தனுடைய வெளிப்பாடே சூரசம்ஹாரம் என்பதனால், இந்திராணியின் மாங்கல்யத்தைக் காப்பதே முதல் காரணம். சசிதேவி மாங்கல்ய தந்து ரட்சாபரண க்ருபாகர ஞானாகர, சுர பாஸ்கரனே--கந்தரலங்காரம்)

இகல் வேல் விநோதன் ... போரில் எழுகின்ற வேலை ஏந்திய பேரழகனும்,

அருள் கூர் ... அருளைச் சுரக்கும்,

இமயகிரி குமரி மகன் ... ஹிமவான் மகளான உமாதேவியின் திருக்குமாரன்,

ஏறு நீலக்ரீவ ரத்ன கலாப மயிலே ... (வாகனமாக) எறிவருவதும், நீலநிறக் கழுத்தையுடையதும் பச்சை மணியைப்போல ஒளிவீசும் தோகையையும் உடைய மயில்தான் அது.

விநாயகர் ஏறிவரும் மூஷிகம், அவருடன் போரிட்ட கஜமுகன் எடுத்த வடிவம். அந்த மூஷிகத்தையே தன் வாகனமாக்கிக்கொண்டார் விநாயகர்.

முருகன் ஏறிவரும் மயில், விநாயகர் சிவனை வலம் வரும் நேரத்தில் அண்ட சராசரங்கள் முழுவதையும் சுற்றி வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.