பதச் சேதம் | சொற் பொருள் |
| சோதி இம வேதண்ட கன்னிகையர் தந்த அபிநய துல்ய சோம வதன | சோதி: ஜோதி, இம: பனி, வேதண்டம்: மலை=இமயமலை; கன்னிகையர்: தோழியர்; அபிநய: அலங்காரம்; துல்ய: பரிசுத்தமான; சோம=சந்திரன்= சந்திரனைப் போன்ற திருமுகம் |
| துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த | துங்க: பெருமை நிறைந்த, த்ரிசூலதரி: திரிசூலத்தை ஏந்தியவள்; கங்காளி: எலும்பு மாலையை அணிந்தவள்; சிவகாம சுந்தரி: உமையம்மை; பயந்த: பெற்ற, |
| நிரைசேர் ஆதி நெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள் யாவும் கொடும் சிறகினால் | நிரைசேர்: வரிசையாக அமைந்த; ஆதி: தொன்மையான, நெடு: நீண்ட; மூதண்ட அண்ட: பழைமையான அண்டங்கள் பகிரண்ட: அண்டகோளத்துக்கு வெளியே உள்ள அண்டங்கள், கொடும் சிறகு: வளைந்த (கோடிய) சிறகு |
| அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே அணைக்கும் கலாப மயிலாம் | அருகில் வரும் தன்னுடைய பெண்மயில் இட்ட முட்டைகளை(க் காப்பது போலவே); கலாப: தோகை |
| நீதி மறை ஓது அண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம் | நீதி நிறைந்ததாகிய வேதங்களில் சொல்லப்படும்; நித்தர்: நித்திய சூரிகள்; பரவு கிரியாம்: போற்றும் மலையாம் |
| நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியாகுலன் சங்கு வாள் | நீலகிரி: திருத்தணிகை; நிராலம்பன்: (தனக்கு எந்தப்) பற்றுக்கோடும் இல்லாதவன்; நிர்ப்பயன்: பயமற்றவன், பயத்தைத் தீர்ப்பவன்; நிர்வியாகுலன்: நிராகுலன், நிர்வியாகுலன் இரண்டும் கவலையற்றவன் என்று பொருள்படும், கவலையைக் களைபவன் என்று பொருள்கொள்வது பொருந்தும் |
| மா திகிரி கோதண்டம் தண்டம் தரித்த புயன் மாதவன் முராரி திருமால் | மாதிகிரி: பெரிய சக்ராயுதம்; கோதண்டம்: சார்ங்கம் என்னும் வில்; தண்டம்: கௌமேதகி என்னும் கதாயுதம்; முராரி: முரன் என்ற அரக்கனை வதைத்தவன் |
| மதுகைடவாரி திரு மருகன் முருகன் குமரன் வரமுதவு வாகை மயிலே. | மது, கைடபன் என்ற அரக்கர்களை அழித்தவன். வாகை: வெற்றி. |

சோதி ... ஜோதிவடிவம் கொண்டவனாக

இம வேதண்ட ... இமயமலையிலே

கன்னிகையர் தந்த ... (உமையம்மையின்) தோழியர்கள் பாதுகாத்துத் தந்தவனும்,

அபிநய ... அலங்காரமானவளும்,

துல்ய சோம வதன.. பரிசுத்தமான நிலவைப் போன்ற (மாசில நிலவு) முகத்தைக் கொண்டவளும் (கருணை ததும்பும் முகம் கொண்டவளும்)

துங்க ... பெருமை மிக்க, சிறந்த,

திரிசூலதரி ... திரிசூலத்தைக் கையில் தரித்தவளும்
கொண்டவளும்,

கங்காளி ... எலும்பு மாலையை அணிந்தவளும்,

சிவகாம சுந்தரி ... சிவனையே எப்போதும் விரும்புபவளும் அழகியுமான உமையம்மை,

பயந்த ... ஈன்ற, படைத்த,

நிரை சேர் ... ஒழுங்கும் வரிசையும் கொண்ட,

ஆதி நெடு ... தொன்மை நிறைந்த, நீண்ட பரந்துள்ளதுமான,

மூதண்ட அண்டம் ... மிகப் பழைய அண்டகோளங்கள்,

பகிரண்டம் யாவும் ... (பகிர்:வெளியே) அண்டங்களுக்கு வெளியே உள்ள புற அண்டங்கள், எல்லாவற்றையும்,

கொடும் சிறகினால் ... வளைந்த தனது சிறகினால்,

அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே ... தன்னுடைய பேடை இட்டதாகிய முட்டைகளை அடைகாக்கும் ஆண்மயிலைப் போல,

அணைக்கும் கலாப மயிலாம் ... அண்டங்கள் புறஅண்டங்கள் அனைத்தையும் தன் சிறகுகளால் மூடிப் பாதுகாக்கின்ற மயில்

(உமையம்மை படைத்த முட்டை வடிவிலான அண்டங்களை மயில் தன் சிறகால் மூடிப் பாதுகாக்கிறது. இப்படிப்பட்ட மயில் யாருடையதோ என்று கேட்டால்)

நீதிமறை ... பல தர்மங்களை உணர்த்தும் வேதங்கள்,

ஓது ... சொல்கின்ற,

அண்ட ... வெளி உலகங்களில் வாழும்,

முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு ... முப்பத்து மூன்று கோடி நித்தியசூரிகளும் (தேவர்களும்) போற்றுகின்ற,

கிரியாம் ... மலையாகிய,

நீலகிரி வேலவன் ... திருத்தணியில் வாழும் வெலாயுதன்,

நிராலம்பன் ... (அனைத்துக்கும் தானே பற்றுக்கோடாக இருந்தாலும்) தனக்கென்று ஒரு பற்றுக் கோடும் இல்லாதவன்,

நிர்பயன் ... பயமில்லாதவன், பயத்தை அறுப்பவன்

நிர்வியாகுலன் ... மனத் துன்பம் இல்லாதவன், மனத்துன்பத்தை வேரறுப்பவன்

(கருதிக் கருதிக் கவலைப்படுவார் கவலைக்கடலைக் கடியும் வடிவேல்—பாரதி)

சங்கு ... பாஞ்சஜன்யம் என்ற சங்கையும்,

வாள் ... நாந்தகம் எனும் வாளையும்,

மா திகிரி ... பெருமை மிக்க சுதர்சனம் என்ற சக்கரத்தையும்,

கோதண்டம் ... சார்ங்கம் என்ற வில்லையும்,

தண்டம் ... கெளமேதகி என்ற கதாயுதத்தையும்,

தரித்த புயன் ... தரித்துள்ள (ஏந்தியுள்ள) தோள்களைக் கொண்டவனும்,

மாதவன் முராரி திருமால் ... மாதவனும் முரன் என்ற அரக்கனை வதைத்தவனும்,

மதுகைட வாரி ... மது கைடபர் என்ற இரண்டு அரக்கர்களைக் கொன்ற திருமாலுக்கும்,

திரு ... திருமகளுக்கும்,

மருகன் ... மருமகனான

முருகன் குமரன் ... முருகவேள் குமரக் கடவுளின்,

வரமுதவு வாகை மயிலாம் .. அடியார்களுக்கு வேண்டும் வரத்தைத் தரும் வெற்றி மயில்தான் அது.

சுருக்கமாக,

திருமாலின் மருகனான முருகனுடைய மயில், உமாதேவியார் படைத்த அத்தனை அண்டங்களையும், தன் பேடையின் முட்டைகளைச் சிறகால் அணைத்துக் காப்பதைப்போலக் காக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை