சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 70

மயில் விருத்தத்தின் ஐந்தாம் பாடலில், உலகம்மை ஈன்றதாகிய உலகங்கள் எல்லாவற்றையும் தன்னுடைய பேடையின் முட்டைகளைக் காப்பதுபோல் தன் சிறகால்

Updated On :25 நவம்பர் 2015, 9:21 am

மயில் விருத்தத்தின் ஐந்தாம் பாடலில், உலகம்மை ஈன்றதாகிய உலகங்கள் எல்லாவற்றையும் தன்னுடைய பேடையின் முட்டைகளைக் காப்பதுபோல் தன் சிறகால் காக்கின்ற மயிலைக் கண்டோம். ஆறாவதான இந்தப் பாடலிலும் மயில் அண்டங்களை தன் சிறகால் மூடிக் காக்கிறது; அசுர அம்சங்களை அதே சிறகின் வீச்சால் பொடிசெய்கிறது. இந்தப் பாடலில் வரும் கெங்காதரன், கங்கையைத் தரிப்பவனான சிவனைக் குறிப்பது. அவன் ஐம்முகச் சிவன், இவன் அறுமுகச் சிவன் என்பதனால் முருகனுக்கும் கங்காதரன் என்ற பெயரைச் சொல்லலாம் என்பது திருமுருக கிருபானந்த சுவாமிகளின் கருத்து. கங்கையால் தரிக்கப்பட்டவன் என்ற பொருளில், கங்காதரன் என்பது பொருந்தும் என்றும் பொருள் சொல்வதுண்டு. முருகன் இசையிலே குடியிருப்பவன் ஆதலாலே, சுரங்களைச் சுராலயம் என்கிறார். பாடலைப் பார்ப்போம்.

சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமு நடுங்கச்


சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
சஞ்சலப் பட உமையுடன்


கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
காரம் பிறந்திட நெடுங்


ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்


சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
சித்ரப் பயோ தரகிரித்


தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
திருத்தணிமகீரதன் இருங்


கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்தி கேயன்


கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே.

</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/234614383&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="JUSTIFY"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.