ஆறாம் பாடலிலே பயோதரம் என்பதற்குத் தனம் என்று பொருள் பார்த்தோம். இந்த ஏழாம் பாடலில் வரும் பயோததி, பய உததி; பாற்கடல். வையாளி வரும் மயிலை இந்தப் பாடலில் காட்டுகிறார். வையாளி என்றால் குதிரை செல்லும் பாதை, நடை. மயிலை ‘பட்சியெனும் உக்ர துரகம்’ என்று பாடுவார். ஆகையாலே, மயிலின் நடை, குதிரையின் நடையாகச் சித்திரிக்கப்படுகிறது. இந்தப் பாடலில் அம்பிகையின் பெயர்கள் அடுக்கி வருகின்றன. மயில் விருத்தத்தின் ஏழாம் பாடல் இது:
தீரப் பயோததி திக்குமா காயமுஞ்
செகதலமு நின்று சுழலத்
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
தீக்கொப் புளிக்க வெருளும்
பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
பதைபதைத் தேநடுங்கப்
படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சைப்ர வாள மயிலாம்
ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
அமிர்தகல சக்கொங் கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
மாநந்த வல்லி சிறுவன்
கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
குருதரு திருத்தணி கைவேள்
கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி
குடிபுகுத நடவு மயிலே.
</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/234630822&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="JUSTIFY"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

