திருவடியோடு கூடுவதற்காக அருணகிரிநாதர் பாடிய பொதுப் பாடல்கள் வரிசையில் ஒன்றான ‘இரவொடும் பகல்’ பாடலைப் பிரித்துப் பொருள் காண்போம். நெச்சுப் பிச்சி போன்றதான பாடல்களோடு ஒப்பிடுகையில் இது சற்றே எளிய பாடல். ஒரு மடக்குக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகள். மொத்தப் பாடலுக்கும் 272 எழுத்துகள். எளிய பாடலானாலும் அதிலும் கச்சிதமாக அமரும் தாளக் கணக்கும், அதன் காரணமாகச் சற்றும் ஏறுமாறாக இல்லாத எழுத்துக் கணக்கையும் அன்பர்கள் பார்க்கலாம்.

பதச் சேதம்

பொருள் சாரம்

இரவொடும் பகலே மாறாதே

இரவு, பகல் மாற்றமில்லாமல் (வேறுபாடில்லாமல்)

அநுதினம் துயர் ஓயாதேயே

தினந்தோறும் துயரமானது ஓயாமல் பெருகி,

எரியும் உந்தியினாலே மாலே பெரிதாகி

வயிற்றிலே (உந்தியிலே) எரிவதான ஜாடராக்கினி வளர்வதால் (பசி முற்றுவதால்) மயக்கம் பெரிதாகி

இரை கொளும்படி ஊடே பாடே மிகுதி கொண்டு

உணவைத் தேடி வாழ்க்கையின் ஊடே, வாழ்விலே, (பாடுபட்டு) உழைத்து, அந்தப் பாடே மிகுதியாக வளர,

ஒழியாதே வாதே

(இதனிடையிலும்) ஓயாமல் (எதைப் பற்றியாவது) வாதம் செய்து கொண்டு,

இடைகளின்சில நாளே போயே வயதாகி

(இவ்வாறு வாழ்வின்) மத்தியிலே சிலகாலத்தைக் கழித்து, பின்னர் வயதாகி,

நரைகளும் பெரிதாயே போயே

பெரிய அளவிலே நரைகூடிப் போய்,

கிழவன் என்றொரு பேரே சார்வே

நடைகளும் பல தாறே மாறே விழல்ஆகி

கிழவன் என்று ஒரு பெயர் வந்து சேர, நடை தடுமாறித் தாறுமாறாகத் தள்ளாடி, விழ நேர்ந்து,

நயனமும் தெரியாதே போனால்

கண்களும் தெரியாமல் போனால்

விடிவது என்று அடியேனே தானே

அடியேனாகிய நான், ‘என்றுதான் விடியுமோ’ (என்று)

நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ

குஞ்சித நடன! (காலை வளைத்துத் தூக்கியாடுபவனே!) மோட்சமாகிய வீட்டை அடையாமலேயே அழிந்துபடுவேனோ.

திரு நடம் புரி தாளீ தூளீ

திருநடனம் செய்யும் தாளை உடையவள் (தாளை உடையவன் தாளன், உடையவள் தாளி) தூளான திருநீற்றைப் பூசியவள்

மகர குண்டலி மாரீ சூரீ

மகரமீன் போன்ற குண்டலங்களை அணிந்தவள், மாரி (துர்கை) மாகாளி (சூரி)

திரி புரம் தழல் ஏவி சார்வீ அபிராமி

திரிபுரம் எரிபடும்படியாகத் தழலை ஏவியவள், (சார்வி) புகலிடமானவள், அபிராமி,

சிவன் இடம் தரி நீலீ சூலீ

சிவனுடைய இடது பாகத்தில் அமர்ந்த நீல நிறத்தவள், சூலம் ஏந்தியவள்,

கவுரி பஞ்சவி ஆயீ மாயீ

கௌரி, (இடம்தரி, நீலி, சூலி, கௌரி ஆகிய நான்கு சக்திகளைத் தொடரும் ஐந்தவது சக்தியான பஞ்சவி, அநுக்கிரக சக்தி,

சிவை பெண் அம்பிகை வாலா சீலா அருள் பாலா

சிவனின் பெண்வடிவான சிவை, அம்பிகை, பாலை (வாலை) பரிசுத்த தேவதை (என்றெல்லாம் துதிக்கப்படும்) உமை அருளிய பாலனே!

அரவம் கிங்கிணி வீரா தீரா

அரவம் = ஒலி. ஒலிக்கின்ற கிண்கிணியை அணிந்தவனே, வீரனே, தீரனே. (வீர்யம் [ஆற்றல்] நிறைந்தவன் வீரன், தீரம் (தைரியம்) நிறைந்தவன் தீரன்)

கிரி புரந்து ஒளிர் நாதா பாதா

மலைகளைக் காத்து (ஆண்டு, குன்றுதோறாடி) சுடர்விடும் நாதனே, (சரண் புகுவதற்கான சரணகமலாலயமான) பாதத்தை உடையவனே

அழகு இளம் குறமானார் தேன் ஆர் மணவாளா

அழகும் இளமையும் பொலியும் குறத்தி மானான வள்ளியின் இனிமை நிறைந்த மணவாளனே

அரி அரன் பிரமாவோடே மூ வகையர்

திருமால், சிவன் பிரமா எனப்படும் மும்மூர்த்திகளும்

இந்திர கோமான் நீள் வான்

(தேவர்களின்) அரசனான இந்திரன், விரிந்த விண்ணுலகத்தவரான

அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே.

தேவர்கள், கந்தர்வர்கள், ஏனையோர் எல்லோருக்கும் நாதனாக விளங்கும் பெருமாளே

இரவொடும் பகலே மாறாதே ... இரவும் பகலுமென மாறுதல் இல்லாமல்,

அநுதினந்துயர் ஓயாதேயே ... நாள் தோறும் (என்னை) துக்கம் இடைவிடாமல் பீடிக்க,

எரியும் உந்தியினாலே மாலே பெரிதாகி ... வயிற்றிலே உண்டாவதான பசியென்னும் தீ பெரிதாக வளர்ந்து அதனால் என்னுடைய மயக்கங்களும் பெரிதாகி,

இரைகொளும்படி யூடே ... (இந்தப் பசியைத் தீர்ப்பதற்காக ஓயாமல்) உணவு தேடி வாழ்க்கையின் ஊடே

பாடே மிகுதி கொண்டு ஒழியாதே வாதே ... (பாடுபட்டு) உழைப்பது அதிகரித்துக் கொண்டே போக, இப்படிப்பட்ட அவதிக்கு நடுவிலும் வாயோ ஓயாமல் எதைக்குறித்தாவது விவாதித்து, தர்க்கித்துக் கொண்டிருக்க, (இப்படியே பொழுது கழிந்து)

இடைகளின்சில நாளே போயே வயதாகி ... இப்படியாக வாழ்க்கையின் இடைக்காலத்தில் சிலகாலம் கழிய, அதன் பிறகு வயதேறிப் போய்,

நரைகளும்பெரிதாயே போயே ... நரை விழுந்து அது படிப்படியாக அதிகரித்துப் போய்,

கிழவனென்றொரு பேரே சார்வே ... (எனக்குப் பெயரும் மாறிப்போய்) கிழவன் என்ற பெயர் வந்து சேர, (**பாரதி பாடல் ஒப்பீட்டைக் கீழே காணவும்.)

நடைகளும்பல தாறே மாறே விழலாகி ... நடை தாறுமாறாகிப் போய் தள்ளாட,

நயனமுந்தெரியாதே போனால் ... கண்களும் தெரியாமல் குருடனாகிப் போனால்,

விடிவதென்று அடியேனே தானே ... அடியவனாகிய நான் என்போது தான் துன்பம் நீங்கி விடிந்து இன்பம் அடைவது?

நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ ... காலை வளைத்துத் தூக்கி நடனம் செய்பவனாகிய சிவபிரானின் மோட்ச வீட்டை அடையாமலேயே நான் அழிந்து போவேனோ?

திருநடம்புரி தாளீ தூளீ ... திருநடனம் செய்கின்ற பாதங்களை உடையவள், திருநீற்றுத் தூளை அணிந்துள்ளவள், (தாளை உடையவள் தாளீ, திருநீற்றுத் தூளை அணிந்தவள் தூளீ)

மகர குண்டலி மாரீ சூரி ... மகர மீன் போன்ற குண்டலங்களைத் தரித்தவள், மாரியாகிய துர்க்கை, மகா காளி,

திரிபுரந்தழல் ஏவீ சார்வீ யபிராமி ... திரிபுரங்களில் நெருப்பை ஏவியவள், புகலிடமாக உள்ளவள், பேரழகி,

சிவன் இடந்தரி நீலீ சூலீ ... சிவனது இடப்பாகத்தைத் தரித்தவள்,
நீல நிறத்தாள், சூலம் ஏந்தியவள்,

கவுரி பஞ்சவி யாயீ மாயீ ... கெளரி, ஐந்தாம் சக்தியாகும் அனுக்கிரக
சக்தி, தாய், மகமாயி,

சிவைபெண் அம்பிகை வாலா சீலா அருள்பாலா ... சிவாம்பிகை,
பாலாம்பிகை, பரிசுத்த தேவதை ஆகிய பார்வதி அருளிய பாலனே,

அரவ கிங்கிணி வீரா தீரா ... ஒலிக்கும் கிண்கிணியை அணிந்துள்ள
வீரனே, தீரனே, (வீர்யமும் தைரியமும் நிறைந்தவனே)

கிரிபுரந்தொளிர் நாதா பாதா ... மலைகளைக் காக்கும் ஒளியாக
விளங்கும் நாதனே, புகலிடமாக விளங்கும் சரணகமலாலயமான பாதங்களை உடையவனே,

அழகிளங்குற மானார் தேனார் மணவாளா ... அழகும் இளமையும்
பொலியும் குறத்தி, மான் போன்ற வள்ளியின் இனிமை நிறைந்த
மணவாளனே,

அரியரன்பிர மாவோடே மூவகையர் ... திருமால், சிவன், பிரமா
எனப்படும் மூவகைத் தெய்வங்கள்,

இந்திர கோமான் நீள்வானமரர் கந்தருவானோர் ஏனோர்
பெருமாளே. ... இந்திரன் என்ற அரசன், பெரிய விண்ணுலகிலுள்ள
தேவர்கள், கந்தர்வர் ஆனோர், பிற எல்லா வகையினர்க்கும் பெருமாளே.

** இந்த இடத்தில்,

தேடிச் சோறு நிதந்தின்று-பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்

வாடித் துன்பமிக உழன்று-பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து- நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல

வேடிக்கை மனிதரைப் போலே-நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்ற பாரதியின் பாடல் ஒலிப்பதைக் காணலாம். காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன், என் காலருகே வாடா உன்னைச் சற்றே மிதிக்கிறேன் என்பதும்

“அந்தகா வந்துபார் சற்றென் கைக்கெட்டவே” என்ற கந்தரலங்காரத்தின் தாக்கம்தான்.

பாடல் வேண்டுவது -

வாழ்நாள் நெடுகிலும் பசி என்று நெருப்பு என்னைப் பீடிக்கிறது; என் ஆசைகள் பெரிதாக வளர்கின்றன; வாழ்க்கையிலோ வருத்தப்பாடுதான் மிஞ்சுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நான் வீணான வாதங்களில் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கிறேன். இப்படியே இருக்க இருக்க வயதேறி, நரைகூடி, கிழப்பரும் எய்தி, கண் பார்வை கெட்டு, கிழவன் என்ற பெயரால் நான் அறியப்படும் நிலையும் வந்தது என்றால், எப்போதுதான் அடியேன் இந்தத் துன்பங்களிலிருந்து விடுபட்டு விடிவுகாலத்தைக் காண்பது?

எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு அடையும் வீட்டு நிலையான உன் திருவடிகளை அடையாமலேயே நான் அழிவேனோ? சிவனுடைய இடதுபாகத்தில் உறைபவளான உமையின் மகனே, குறமானான வள்ளியின் இனிய கணவனே, மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும் தலைவனே! எனக்கு வீட்டுப் பேற்றை அருள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை! தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி

எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை!

யாராலும் கொடுக்க முடியாத வாக்குறுதிகளை முதல்வா் ஸ்டாலின் கொடுத்துள்ளாா்! பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை