பதச் சேதம் | சொற் பொருள் |
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார்
| பரிமள: மணமுள்ள; களப(ம்): கலவை; சுகந்த: நறுமணம்; சந்த: அழகிய; |
படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே
| படை: ஆயுதம்; யமபடை: கொடிய ஆயுதம்; அந்திக்கும்: சந்திக்கின்ற; கட்கடை: கண் கடை, கடைக்கண்; |
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே
| வரிஅளி: வரி வண்டு; நிரை: வரிசை; முரல்: ஒலிக்கும், ரீங்கரிக்கும்; கொங்கு: வாசனையுள்ள; கங்குல்: இருண்ட; குழல்: கூந்தல்; |
மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே
| மறுகுதல்: கவலை கொள்ளுதல்; |
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா
| தொங்கல்: மாலை; |
அலை குமு குமு என வெம்ப கண்டித்து எறி வேலா
| வெம்ப: கொதிக்க; கண்டித்து: கோபித்து; |
திரி புரம் தகனரும் வந்திக்கும் சற் குரு நாதா
| திரிபுர தகனர்: சிவனாரும்; வந்திக்கும்வணங்கும்; |
ஜெய ஜெய ஹர ஹர செந்தில் கந்த பெருமாளே.

பரிமள களப சுகந்த சந்தத் தனமானார்... நறுமணம் நிறைந்த சந்தனக் கலவைகளை (அணிந்ததனால் அவற்றின்) மணம் வீசுகின்ற அழகான தனங்களை உடைய பெண்களுடைய,

படை யமபடையென அந்திக்கும் கண் கடையாலே... ஆயுதங்களிலேயே மிகக் கொடிய ஆயுதமான யமபடைக்கு ஒப்பான கடைக்கண் பார்வையாலும்;

வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே... வரிவண்டுகள் கூட்டம் கூட்டமாகச் சூழ்ந்து ஒலிக்கின்ற மணம் நிறைந்ததும் இருண்டதுமான கூந்தலின் (வசீகரத்தாலும்);

மறுகிடு மருளனை ... மயங்கி மனம் கவலையுற்றுத் திரிகின்றவனான அடியேனை,

இன்புற்று அன்புற்று அருள்வாயே ... இனிதாகவும் அன்புடனும் ஆட்கொண்டு அருளவேண்டும்.

அரி திரு மருக ... ஹரியாகிய திருமாலுக்கும் திருவாகிய இலக்குமிக்கும் மருமகனே!

கடம்பத் தொங்கற் றிருமார்பா ...கடப்ப மாலையை அணிந்திருக்கும் திருமார்பை உடையவனே!

அலைகுமு குமுவென வெம்ப கண்டித்து எறிவேலா... குமுகுமுவென்று அலைகள் கொதித்துப் (பொங்குமாறு) கடலைக் கோபித்து வேலை எறிந்தவனே!

திரிபுர தகனரும் வந்திக்குஞ் சற்குருநாதா ... திரிபுரங்களையும் சுட்டெரித்த பரமசிவனார் வணங்குகின்ற உத்தம குருநாதா!

ஜெயஜெய ஹரஹர ... வெற்றி மிக்கவனே! பாவத்தைப் போக்குபவனே!

செந்திற் கந்தப் பெருமாளே. ... திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

சுருக்க உரை

திருமாலுக்கும் திருமகளுக்கும் மருமகனே! கடப்ப மாலையை அணிந்த மார்பை உடையவனே! அலைகள் குமுகுமுவென்று கொதித்துப் பொங்குமாறு கடலைக் கோபித்து வேலை வீசியவனே! முப்புரம் எரிசெய்த பெருமானும் வணங்குகின்ற சற்குருநாதனே! (ஜெயஜெய ஹரஹர=) வெற்றியை உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே!

மணமுள்ள பலவிதமான கலவைகளைப் பூசியதால் வாசம் வீசும் மார்பகங்களை உடைய மாதர்களுடைய, மிகக்கொடிய யமபடை என்ற ஆயுதத்துக்குச் சமமான கடைக்கண் பார்வையாலும்; வரிவண்டுகள் ஒலிக்கின்ற மலர்களைச் சூடியதும், இருண்டதுமான கூந்தலின் செறிவாலும், மனம் கவன்று அறிவு மயங்குகின்ற அடியேனை இனியனாகவும் அன்பனாகவும் (இருந்து) ஆண்டுகொண்டருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு