இறைவனை மயில்மீது அமர்ந்த கோலத்தில் எழுந்தருள வேண்டும்—‘ஏழை அடிமைக்காக வஜ்ரமயில் மீதில் இனி எப்போது வருவாயே’—என்று கோரும் இன்றைய பாடல் திருச்செந்தூர்த் தலத்துக்கானது. ‘வேலை நகர்’ என்ற பெயரால் திருச்செந்தூரைக் குறிக்கின்றார். வேலை என்றால் கடல். கடல் சூழ்ந்த நகரான திருச்செந்தூர் என்பது பொருள். ‘முத்தமிழை ஆயும் வரிசைக்கார’ என்று இறைவனை விளிக்கிறார்.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் முதல் சீர், மூன்றாம் சீர்களில் இரண்டாமெழுத்து வல்லொற்று; இரண்டாம் சீரின் முதலெழுத்தும், மூன்றாம் சீரின் இரண்டாமெழுத்தும் (ஒற்றொழித்து) நெடில். பாடலைப் பார்ப்போம்.
தத்ததன தானதன தத்தான
தத்ததன தானதன தத்தான
தத்ததன தானதன தத்தான - தனதான
சத்தமிகு மேழுகட லைத்தேனை
யுற்றமது தோடுகணை யைப்போர்கொள்
சத்திதனை மாவின்வடு வைக்காவி - தனைமீறு
தக்கமணம் வீசுகம லப்பூவை
மிக்கவிளை வானகடு வைச்சீறு
தத்துகளும் வாளையடு மைப்பாவு - விழிமாதர்
மத்தகிரி போலுமொளிர் வித்தார
முத்துவட மேவுமெழில் மிக்கான
வச்சிரகி ரீடநிகர் செப்பான - தனமீதே
வைத்தகொடி தானமயல் விட்டான
பத்திசெய ஏழையடி மைக்காக
வஜ்ரமயில் மீதிலினி யெப்போது - வருவாயே
சித்ரவடி வேல்பனிரு கைக்கார
பத்திபுரி வோர்கள்பனு வற்கார
திக்கினுந டாவுபுர விக்கார - குறமாது
சித்தஅநு ராககல விக்கார
துட்டஅசு ரேசர்கல கக்கார
சிட்டர்பரி பாலலளி தக்கார - அடியார்கள்
முத்திபெற வேசொல்வச னக்கார
தத்தைநிகர் தூயவநி தைக்கார
முச்சகர்ப ராவுசர ணக்கார - இனிதான
முத்தமிழை யாயும்வரி சைக்கார
பச்சைமுகில் தாவுபரி சைக்கார
முத்துலவு வேலைநகர் முத்தேவர் - பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

