பதச் சேதம் | சொற் பொருள் |
செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அ(ல்)ல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத
| இக்கு: கரும்பு; மாரன்: மன்மதன்; ஊதை: காற்று; |
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி
| சித்ர வீணை: இனிய ஒலியை உடைய வீணை; அலர்: வசைமொழி; கனகவி: கனத்த, பெரிய கவி; |
கை கபோல(ம்) கிரி பொன் கொள் ராசி கொடை கற்ப தாரு செக த்ரய பானு
| கை: துதிக்கை; கபோலம்: கன்னம்; கைக் கபோலக் கிரி: யானை, ஐராவதம்; செகத்ரய: மூவுலகிலும்; பானு: சூரியன்; |
கற்ற பேர் வைப்பு என செத்தை யோகத்தினர் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய்
| வைப்பு: சேமநிதி; செத்தை: குப்பை; |
சக்ர பாணிக்கும் அ பத்ம யோனிக்கும் நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய
| சக்ரபாணி: சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமால்; பத்மயோனி: திருமாலின் உந்திச் சுழியிலிருந்து உதித்த பிரமன்; நித்த: நித்ய, அழியாத; ப்ரதாபர்: புகழ்பெற்றவர்; |
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அ தத்வ ரூப கிரி புரை சாடி
| கிரி: கிரெளஞ்ச மலை; உற்பத்தி: தோன்றிய தன்மை; புரை சாடி: பெருமையைக் குலைத்து; |
கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே
| கொக்கு: மா மரம்; பொட்டுஎழ: துளைபட; ராவுத்தன்: (மயிலாகிய) குதிரை(யில் ஏறும்) வீரன்; |
கொற்றவா உற்பல செச்சை மாலை புய கொச்சை வாழ் முத்தமிழ் பெருமாளே.
| உற்பலம்: நீலோற்பலம்; செச்சை: வெட்சி; கொச்சை: சீகாழி; |

செக்கர் வானப் பிறைக்கு இக்கு மாரற்கு அ(ல்)ல ... சிவந்த வானத்திலே விளங்கும் பிறைச் சந்திரனுக்கும்; கரும்பு வில்லை ஏந்தியுள்ள மன்மதனுக்கும் (வாடுவது) போதாதன்று;

தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத சித்ர வீணைக்கு ... தெற்கிலிருந்து வீசும் குளிர்ந்த தென்றலுக்கும்; தன் இனிய ஓசை நயத்தால் அனல்போல வாட்டம் ஏற்படுத்துகின்ற சித்ரவீணைக்கும்;

அலர் பெற்ற தாயர்க்கு அவச் சித்தம் வாடி ... வசைமொழிகளைப் பேசும் (பொருட்பெண்டிருடைய) தாயர்களுக்கும் உள்ளம் வீணில் வாட்டம் அடைந்து;

கனக் கவி பாடி ... (செல்வந்தர்களை அடைந்து அவர்கள் மீது) நீண்ட பாடல்களைப் பாடி;

கைக் கபோலக் கிரி பொன் கொள் ராசிக் கொடைக் கற்ப தாருச் செக த்ரய பானு ... ‘(பெருமையில்) ஐராவதம் போன்றவரே! பொன்குவியலைக் கொண்ட மேருவே! கற்பகத் தருவே! மூன்றுலகுக்கும் விளங்கும் சூரியனே!

கற்ற பேர் வைப்பு எனச் செத்தை யோகத்தினர்க் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய் ... கற்ற புலவர்கள் அடைந்த சேமநிதியே!’ (என்றெல்லாம்) வெற்றுக் குப்பையான செல்வயோகத்தைப் படைத்தவர்களுடைய கைப்பாவையாக நான் (பொய்யுரைகளைப் பாடி) நாணி நிற்கின்றேனே, இந்த நிலையைப் பார்த்தருள்வாயாக.

சக்ர பாணிக்கும் அப் பத்ம யோனிக்கு(ம்) நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய... சக்கரத்தைக் கையில் ஏந்தியவரான திருமாலுக்கும்; அவருடைய உந்திச் சுழியில் தோன்றிய பிரமனுக்கும்; என்றும் அழியாதவர் என்று புகழப்படும் பரமசிவனுக்கும் எட்டாத பொருளாக இருக்கும்,

தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அத் தத்வ ரூப ... வேதங்களின் தத்துவங்களுடைய தோற்றத்தை உபதேசித்த ஞான சொரூபனே!

கிரிப் புரை சாடிக் கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ ... கிரெளஞ்ச மலையின் பெருமையைக் குலைத்தவனே! மாமரத்திலே புகுந்து ஒளிந்துகொண்டவனான சூரபத்மனுடைய உடல் தொளைபடும்படியாக,

குத்து ராவுத்த பொற் குமரோனே ... வேலினால் குத்தியவனே! மயிலாகிய பரியேறும் வீரனே! குமரனே!

கொற்றவா உற்பலச் செச்சை மாலைப் புயக் கொச்சை வாழ் முத்தமிழ்ப் பெருமாளே. ... அரசே! நீலோத்பல, வெட்சி மாலைகளை அணிந்த புயத்தவனே! கொச்சை எனப்படும் சீகாழித் தலத்தில் வீற்றிருப்பவனே! முத்தமிழ்ப் பெருமாளே!

சுருக்க உரை

சக்கரத்தை ஏந்திய திருமாலுக்கும், அவருடைய உந்திச் சுழியில் தோன்றிய பிரமனுக்கும், அழியாதவர் என்ற புகழுடைய பரமசிவனுக்கும் எட்டாததாகிய வேதங்களின் உற்பத்தியை உபதேசித்த ஞான சொரூபனே! கிரெளஞ்ச கிரியின் பெருமையைக் குலைத்தவனே! மாமரத்திலே புகுந்து ஒளிந்துகொண்டிருந்த சூரபத்மனுடைய உடல் தொளைபடும்படி அவனை வேலால் குத்திய மயில் வீரனே! அரசே! நீலோத்பல மாலையையும் வெட்சி மாலையையும் அணிந்த புயங்களை உடையவனே! சீகாழித் தலத்தில் வீற்றிருப்பவனே!

வானத்தில் உள்ள பிறைச் சந்திரனுக்கும்; கரும்புவில்லை ஏந்திய மன்மதனுக்கும்; குளிர்ச்சியாக வீசும் தென்றற் காற்றுக்கும்; தன் இனிய இசையாலே அனலாகக் கொதிக்கச் செய்கின்ற சித்ர வீணைக்கும்; வசை மொழிகளைப் பேசும் பொருட்பெண்டிரின் தாயருக்கும் உள்ளம் வாடி நொந்து,

அவர்களுக்குக் கொடுக்கப் பொருள்தேடி செல்வர்களை அடைந்து, (அவர்களை) ‘ஐராவதமே! பொன்குவியல்களை உடைய மேருவே! கொடைக்குப் பேர்போன கற்பக விருட்சமே! மூன்று லோகத்துக்கும் விளங்கும் ஒரே சூரியனே’ என்றெல்லாம் பொய்யுரைகளைச் சொல்லி அவர்கள்மீது நீண்ட பொய்க் கவிகளைப் பாடி, இத்தகைய அற்பர்களிடம் நாணி நிற்கும் அடியேனைக் கண்பார்க்க வேண்டும். (இந்த நிலை தொடராத வகையில் அடியேனை உய்வித்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு