புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே
என்றார் அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில். அம்மையும் அப்பனுமான இறைவியும் இறைவனும் நம்மை நாடி வந்து, தம் அடியார்களுடைய திருக்கூட்டத்தின் நடுவே இருக்கும்படி செய்து, நம் சிரத்தில் தம் தாமரைப் பாதங்களைப் பதிக்கிறார்கள் என்றால் மனமே இதற்கு நாம் புண்ணியம் செய்திருக்கிறோம் அல்லவா என்பது பொருள். அடியார் திருக்கூட்டத்தோடு கலந்திருப்பது நாடத் தக்கனவற்றிலெல்லாம் தலையாயது. அதைத்தான் இந்தப் பழநித் தலத்துக்கான பாடலில் குருநாதர் கேட்கிறார்.
அடிக்கு இருபத்தைந்து எழுத்துகளும் இவற்றில் 1, 8, 15, 24, 25 ஆகிய எழுத்துகள் நெடில்; மற்ற அனைத்தும் குறில். இடையின மெய்கள் மட்டும் பயிலும் இந்தப் பாடல் முழுவதிலும் வல்லின மெல்லின மெய்கள் இடம் பெறவில்லை.
இந்தப் பாடலில் இன்னொன்றும் குறிப்பிடத் தக்கது. ‘மனிதரைப் பொய்யாக வாழ்த்திப் பாடாமல்’ இருக்கும் வரத்தைப் பல பாடல்களில் கேட்டுள்ள குருநாதர், தன் பாடல்களில் மனிதர்களைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளாரா என்று பார்த்தால், மூன்று பேரைக் குறிப்பிட்டுள்ளார். மூவரும் முருகன் அடியார்கள். ‘அடியார்கள் நடுவிருக்கப்’ பண்ணும்படிக் கோரும் பாடலில் இது இடம் பெறுவது பொருத்தமானதும்கூட. பிரபுடதேவ மகராஜன் (அதல சேடனாராட); கலிசை சேவகன் (இன்றைய பாடலிலும், ‘சீயுதிரம் எங்கும்’ என்று தொடங்கும் இன்னொரு பாடலிலும்); சோமநாதர் என்னும் ஒரு அன்பர் (ஒருவழிபடாது என்ற சோமநாதன் மடப் பாடல்) ஆகியோரே குருநாதர் குறிப்பிட்டுப் பாடியுள்ள மூன்று மனிதர்கள், முருகன் அடியார்கள். இவர்களில் பிரபுடதேவ மகராஜனைத் தவிர மற்ற இருவரைப் பற்றி இதற்கு மேற்பட்ட விவரங்கள் இல்லை. பாடலைப் பார்ப்போம்.
தான தனனதன தான தனனதன
தான தனனதன தனதானா
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி புனைவோனே
மாக முகுடதிர வீசு சிறைமயிலை
வாசி யெனவுடைய முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/274657009&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

