ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 310

திருத்தணித் தலத்துக்கான இன்றைய பாடல், ‘தணிகை’ என்று ஓதும் பேற்றைக் கோருகிறது.  அடிக்கு ஒற்றொழித்து இருபத்திரண்டு எழுத்துகள் உள்ள இந்தப் பாடலில் (ஒற்று சேர்த்து) ஒவ்வொரு ஏழாவது எழுத்தும் வல்லின மெய். 

Updated On :21 ஜூலை 2016, 10:34 am

திருத்தணித் தலத்துக்கான இன்றைய பாடல், ‘தணிகை’ என்று ஓதும் பேற்றைக் கோருகிறது.  அடிக்கு ஒற்றொழித்து இருபத்திரண்டு எழுத்துகள் உள்ள இந்தப் பாடலில் (ஒற்று சேர்த்து) ஒவ்வொரு ஏழாவது எழுத்தும் வல்லின மெய்.  இருபத்தோராவது எழுத்து மட்டும் நெடில், மற்ற அனைத்து எழுத்துகளும் குறில்.  (இப்படிச் சொல்லும் சமயங்களில் ஈற்றுச் சீரான பெருமாளே, தம்பிரானே என்று கடைசி இரண்டெழுத்துகள் நெடிலாக அமைந்திருப்பது கணக்கில் வராது.  தாளக் கணக்கின்படி ஈற்றுக் குறில், நெடிலாகவே ஒலிக்கும்.  ‘தம்பி’ எனப்படுவது ‘தம்பீ’ என்று நீண்டு ஒலிப்பது போல.  அதிகமான technical detailsஐ இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.  பின்னொரு நாள் பார்ப்போம்.)

வள்ளல்களைப் புகழவேண்டுமானால், பழைய பாடல்களில் உள்ளனவற்றை அப்படியே எடுத்துக் கொண்டு, கொஞ்சம் அங்குமிங்குமாக வார்த்தைகளை மாற்றிப் போட்டு பாடல் எழுதும் பழக்கம் என்றும் உண்டு போலும்.  அதைத்தான் ‘பழைய மொழியைத் திருடி, நெருடிக் கவிபாடி’ என்று கேலி பேசுகிறார்.  பாடலைப் பார்ப்போம்.

தனன தனனத் தனன தனனத்
      தனன தனனத்                      தனதான

சொரியு முகிலைப் பதும நிதியைச்
         சுரபி தருவைச்                   சமமாகச்
      சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
         சுமட ரருகுற்                     றியல்வாணர்
தெரியு மருமைப் பழைய மொழியைத்
         திருடி நெருடிக்                   கவிபாடித்
      திரியு மருள்விட் டுனது குவளைச்
         சிகரி பகரப்                       பெறுவோனோ
கரிய புருவச் சிலையும் வளையக்
         கடையில் விடமெத்              தியநீலக்
      கடிய கணைபட் டுருவ வெருவிக்
         கலைகள் பலபட்                 டனகானிற்
குரிய குமரிக் கபய மெனநெக்
         குபய சரணத்                     தினில்வீழா
      உழையின் மகளைத் தழுவ மயலுற்
         றுருகு முருகப்                   பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/274678738&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.