ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

பகுதி - 317

உன்னருகில் பொருந்தியிருக்கும் குறக்குல மின்கொடியான வள்ளியம்மையின் திருப்பாதங்களைக் கண்டு, ‘எனக்கு நீயே புகல்’

Updated On :27 ஜூலை 2016, 9:12 am

பதச் சேதம்

சொற் பொருள்

துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே

ஒளி துஞ்சும்: தேகத்தின் ஒளி மங்குகின்ற; சஞ்சலம்: மயக்கம்;

இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி என்றென்றும் தொண்டு செ(ய்)யும்படி அருள்வாயே

உம்பர்: வானவர்; பத கஞ்சம்: பாத தாமரை;

நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி  நின்று அன்பின்தன் படி கும்பிடும் இளையோனே

நின் பங்கு: உன் பக்கத்தில்; ஒன்றும்: பொருந்தும்;

பைம் பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே.

சிந்தின்: கடலின், கடற்கரையின்; பம்பும்: நிரம்பியிருக்கும்;

துன்பங்கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து... துன்பத்தை அடைந்து, உடல் மெலிந்து, மிகவும் நொந்துபோய்;

அன்பும் பண்பும் மறந்து ... அன்பையும் நற்பண்புகளையும் மறந்துபோய்;

ஒளி துஞ்சும் ... உடலின் ஒளி (தேக காந்தி) மங்கும்படியாகச் செய்ம்

பெண் சஞ்சல மென்பதில் ... பெண் மயக்கம், மோகம் என்பதை,

அணுகாதே ... நான் அணுகவும் செய்யாமல் (இருத்தி);

இன்பந்தந்து ... இன்பத்தைக் கொடுத்து

உம்பர் தொழும்பத கஞ்சம் ... தேவர்கள் தொழுகின்ற உன் திருவடித் தாமரைகளையே,

தம் தஞ்ச மெனும்படி ... எமக்குத் தஞ்சம் என்று மனத்திலே கொண்டு,

என்றென்றுந் தொண்டு செயும்படி அருள்வாயே... எப்போதும் தவறாமல் உனக்குத் தொண்டு செய்யும் (பேற்றை) அருளவேண்டும்.

நின்பங்கு ஒன்றும் ... உனக்கு அருகிலேயே பொருந்தியிருக்கும்

குற மின்சரணங்கண்டு ... குறமகளும் மின்னல் போன்றவளுமான வள்ளியின் திருப்பாதங்களைக் கண்டு,

உன் தஞ்ச மெனும்படி நின்று ... நீயே எனக்குப் புகலிடம் (என்று அந்தப் பாதங்களில்),

அன்பின் தன்படி கும்பிடு மிளையோனே... அன்பின் முறைப்படி  அந்தப் பாதங்களில் வணங்கிய இளையவனே!

பைம்பொன் சிந்தின் துறை தங்கிய... அழகிய பசுமை நிறத்தில் உள்ள கடலின் கரையில் இருப்பதான

குன்றெங்குஞ் சங்கு வலம்புரி பம்பும் ... குன்றம் முழுவதிலும் சங்கும் வலம்புரியும் நிரம்பியதான,

தென் செந்திலில் வந்தருள் பெருமாளே. ... அழகான திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமாளே!

சுருக்க உரை

உன்னருகில் பொருந்தியிருக்கும் குறக்குல மின்கொடியான வள்ளியம்மையின் திருப்பாதங்களைக் கண்டு, ‘எனக்கு நீயே புகல்’ என்று அந்தப் பாதங்களில் அன்பின் முறைப்படிக் கும்பிட்ட இளையவனே! பசிய நிறத்திலுள்ள கடலின் கரையிலே இருப்பதான குன்றம் முழுவதிலும் சங்கும் வலம்புரியும் நிறைந்து கிடக்கின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமாளே!

துன்பத்தை அடைந்து, தேகம் மெலிவுற்று; அன்பையும் நற்பண்புகளையும் மறந்து, தேகத்தின் ஒளியைக் குன்றச் செய்கின்ற பெண்மயக்கத்தில் அடியேன் சிக்கிக் கொள்ளாதபடி; இன்பத்தைத் தருவதும், தேவர்கள் தொழுவதுமான உன் திருவடித் தாமரைகளே தஞ்சம் என்று அடைந்து எப்போதும் உனக்குத் தொண்டாற்றும் பேற்றைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.