பதச் சேதம் | சொற் பொருள் |
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர
| கத்தூரி: கஸ்தூரி; அகரும்: அகிலும் (அகர்: அகில்); ம்ருகமத(ம்): (கஸ்தூரி என்றே பொருள், அது முதலில் சொல்லப்பட்டுவிட்டதால் இங்கே) கஸ்தூரி மஞ்சள்; படிர: படீர என்பதன் குறுக்கல் விகாரம், படீர(ம்): சந்தனம்; கற்பூரம்: பச்சைக் கற்பூரம்; களபம்: கலவைச் சாந்து; |
கட்டு ஆரவடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர்
| கட்டு: கட்டப்பட்ட; ஆர வடமும்: ஹார வடமும்—முத்து மாலையும்; அடர்வன: நெருங்கின; நிட்டூர: கொடிய; |
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே
| கொத்து: பூங்கொத்து, கொத்திலிருந்து; ஊரு(ம்): ஊர்கின்ற, வடிகின்ற; நறவம்: தேன்; அதரத்து ஊறல்: இதழ் எச்சில்; கொல்சேரி: கொல்லர் சேர்ந்துள்ள பட்டறை; |
கொக்கு ஆ(ம்) நரைகள் வரு முனம் இக்காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ
| கொக்காம் நரைகள்: வெளுத்து, கொக்கைப் போலக் காட்சிதரும் நரைமுடி; இக்காய: இந்தக் காய, இந்த உடலின்; |
அ தூர புவன தரிசன(ம்) நித்தார கனக நெடு மதில் அச்சான வயலி நகரியில் உறை வேலா
| அத்தூர: அந்தத் தூர, தொலைவிலிருந்தே; நித்தாரம்: நிச்சயமாக; வயலி: வயலூர்; |
அச்சோ என (அ)வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவை ஒடு அக்காகி விரக பரிபவம் அறவே பார்
| அச்சோ: ஆச்சரியக் குறிப்பு; அவச: வசமிழந்த, பரவச; அக்குஆகி: கண்ணாகி, கண்ணும் கருத்துமாகி (அக்கு: கண்); பரிபவம்: துன்பம்; |
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள் தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா
| பத்துஊரர்: (பக்தர்களுக்கான) பத்து லட்சணங்களும் பொருந்தியவர்—சுந்தரர்; மெய்த்தூதர்: சிவனார்; பவுருஷம், பௌருஷம்: ஆண்மை; |
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே.
| பனைவளர்: பனை மரங்கள் வளரும்; மை: இருண்ட; மருவும்: சேரும்; |

கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன ... கஸ்தூரியையும்; அகிலையும்; கஸ்தூரி மஞ்சளையும்; ஏராளமான சந்தனத்தையும்; பன்னீர், பச்சைக் கற்பூரம் இவையெல்லாம் கலந்த கலவைச் சாந்தை அணிந்தவையும்;

மணி சேர கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர் ... ரத்தினங்களைச் சேர்த்துக் கட்டிய முத்துமாலைகளை அடர்த்தியாக அணிந்தவையும்; கொடிய கலகத்தை விளைவிக்கக்கூடியவையும்; கட்டிய கச்சோடு போரிட்டு எழுபவனவுமான மார்பகங்களையுடைய மாதர்களுடைய,

கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே ... கொத்து மலர்களிலிருந்து வடிகின்ற தேனைப் போன்ற வாயிதழ் ஊறலை அருந்தியும்; அவர்களோடு பொருந்தி, கொல்லர் பட்டறையில் இடப்பட்ட மெழுகைப் போல உருகி வீணே அழிந்துவிடாமல்;

கொக்கு ஆ(ம்) நரைகள் வரு முனம் இக்காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ ... தலையிலுள்ள முடி, கொக்கைப் போல வெண்மையான நரைப்பதற்கு முன்னர், இந்த உடலில் இளமை மிச்சமாக இருக்கும்போதே, உனக்குத் தொண்டு செய்யும் அடிமையாக அடியேன் மாறும் வழியை (உனது திருவுள்ளம்) அருளாதோ? (அருளவேண்டும்.)

அத் தூர புவன தரிசன(ம்) நித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா ... வெகுதொலைவிலிருந்தே கண்ணுக்குப் புலனாகிறதும்; பொன்னால் அமைந்ததும்; நீண்டதுமான மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூரில் வீற்றிருக்கின்ற வேலா!

அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே ... ‘அச்சோ! இதென்ன அதிசயம்’ என்று (உலகத்தவர்கள்) ஆச்சரியப்படும்படி; தன்வசம் இழந்த மகிழ்ச்சியாலும் விரகத்தாலும் உள்ளம் சோர்வடைந்த பரவை நாச்சியார் மீதே கவனமாக இருந்த, அவரைப் பிரிந்ததால் ஏற்பட்ட துன்பம் நீங்கும்படி,

பார் பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய்த் தூதர் விரவ அருள் தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா ... அடியாருக்கு உரிய பத்து லட்சணங்களும் பொருந்தியவரான சுந்தரர் துதித்துப் போற்றவும்; உண்மையான தூதராக விரைந்து சென்று (தூது சொல்லி) இருவரும் ஒன்று கலக்கும்படி அருள் செய்த பரமசிவனாருக்கு உற்ற துணைவனும்; பௌருஷம் (புருஷ தத்துவம்) நிறைந்த மேலான குருவுமானவனே!

பச்சோலை குலவு பனை வளர் மைச் சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே. ... பசுமையான ஓலைகளோடு விளங்குகின்ற பனைமரங்கள் வளர்ந்துள்ள, (அந்த நிழலாலே) இருண்ட சோலைகளில் மயில்கள் நடனமாடுவதான பட்டாலியூர் தலத்தில் வீற்றிருக்கின்றவனே! தேவர்களுடைய பெருமாளே!

சுருக்க உரை

வெகுதொலைவிலிருந்தே, ‘இது வயலூர்’ என்று அடையாளம் காட்டும் வண்ணமாக நீண்ட பொன்மதில் உள்ளதாகிய வயலூரில் வீற்றிருப்பவனே! அட! இப்படியுமா’ என்று அனைவரும் வியக்கும் வண்ணமாக, பிரிவுத் துயரத்தால் வருந்தி விரகதாபத்தில் இருந்தவரான பரவை நாச்சியார் மீதே எண்ணத்தை நாட்டியவரான சுந்தரர், துதித்துப் போற்றியதும், உடனடியாக அவர்பொருட்டுத் தூது நடந்து, இருவரும் ஒன்றாகச் சேர அருள்பாலித்தவரான சிவபிரானுடைய உற்ற துணைவனே! புருஷ தத்துவம் நிறைந்தவனான குருமூர்த்தியே! பச்சை ஓலைகளைக் கொண்ட பனைமரங்கள் நிறைந்து, இருள் கவிந்த சோலைகளில் மயில்கள் நடனமாடும் பட்டாலியூரில் வீற்றிருப்பவனே! தேவர்கள் பெருமாளே!

கஸ்தூரி, அகில் முதலான பலவிதமான நறுமணக் கலவைச் சாந்தைப் பூசியதும்; ரத்தினங்களோடு கூடியதும், நெருக்கமானதுமான பல முத்துமாலைகளை அணிந்திருப்பதும்; கச்சை எதிர்த்து எழுவதுமான மார்பகங்களை உடைய மாதர்களுடைய இதழ் ஊறலை, பூங்கொத்திலிருந்து வடியும் தேனைப் போலப் பருகியும்; அவர்களோடு பழகுவதால் கொல்லர் உலையில் இடப்பட்ட மெழுகைப் போல உள்ளம் உருகியும் வீணே பொழுது கழியாமல்,

தலை வெளுத்து நரை தோன்றும் முன், இளமை இன்னும் மிச்சமிருக்கும்போதே அடியேன் உனக்குத் தொண்டனாகிக் குற்றேவல் செய்யும் பேற்றை உனது திருவுள்ளம் அருளாதோ? (அருளவேண்டும்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!
10 கோடி பார்வைகளைக் கடந்த முட்ட கலக்கி!

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு