திருச்செந்தூர் தலத்துக்கான பாடலிது. அருணகிரியாருடன் எப்போதும் மோதிக்கொண்டிருந்த சம்பந்தாண்டான், தனக்குப் பலவிதமான பட்டப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு பல்லக்கில் பவனிவந்த சமயத்தில் அவனுடைய அகந்தை நீங்குமாறு இந்தப் பாடலைப் பாட, பல்லக்கு நொறுங்கியதாகச் சொல்வார்கள். திருமுருக கிருபானந்த வாரியார் இயற்றிய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் என்ற நூலில் இப்படியொரு குறிப்பு இருக்கிறது. அப்படியும் சொல்லலாம். பொதுவாகவே தன்னுடைய அகந்தை அழியும்படிப் பாடியதாகவும் சொல்லலாம். உரையாசிரியர்கள் பின்னதைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள்.
இந்தப் பாடலில் திருமால், பரமசிவனிடமிருந்து சக்ராயுதத்தைப் பெற்ற வரலாறு சொல்லப்படுகிறது. மைசூரு, நஞ்சங்கூட்டில் உள்ள சிவாலயத்தில் இக்காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

தனதனன தான தான தந்தன
தனதனன தான தான தந்தன
தனதனன தான தான தந்தன தந்ததான
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி சங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொ டுலாவு மால கந்தைத விர்ந்திடாதோ
அடல்பொருத பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ ணாம லேக சங்கர
அரஹர சிவாம ஹாதெ வென்றுனி அன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ ணங்கியு
ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
அதிபெல கடோர மாச லந்த்ர னொந்துவீழ
உடல்தடியு மாழி தாவவெ னம்புய
மலர்கள் தச நூறு தாளி டும்பக
லொருமலரி லாது கோவ ணிந்திடு செங்கண்மாலுக்
குதவிய கேசர் பால இந்திரன்
மகளை மண மேவி வீறு செந்திலி
லுரியஅடி யேனை யாள வந்தருள் தம்பிரானே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/268248842&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

