பதச் சேதம் | சொற் பொருள் |
தாமா தாம ஆலாபா லோக ஆதாரா தார(ம்) தரணி ஈசா
| தாமா: தாமம் (மாலையை) அணிந்தவனே; தாம ஆலாப: இனிமையாக உரையாடுபவனே; லோக ஆதாரா: உலகத்துக்கு ஆதாரமானவனே; தாரா: நீர்; தரணி: நிலம்; |
தான ஆசாரோ பாவா பாவோ நாசா பாசத்து அபராத
| தான(ம்): கொடை; ஆசாரோ பாவா: கடைபிடிக்கும் நெறியாக பாவிப்பவர்களுடைய; பாவோநாசா: பாவங்களை நாசம் செய்பவனே; பாசத்து: பற்றால்; அபராத: தண்டையாய்; |
யாமா யாமா தேசார் ஊடு ஆராயா ஆபத்து எனது ஆவி
| யாமா: தெற்கிலுள்ள; யாமாதேசார்: யமபுரியைச் சேர்ந்தவர்கள்; ஊடு: இடையே; |
ஆமா காவாய் தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ
| நீர் வாயாதே: நீர்மை—நற்குணம்—வாய்க்காமல்; ஈமத்து: சிதையிலே; உகலாமோ: அழியலாமோ? |
காமா காம ஆதீனா நீள நாக வாய் காள கிரியாய்
| காமா: காமனே—அன்புடையோனே; காம ஆதீனா: (அன்பர்கள்) காமித்ததை (விரும்பிதை அளிக்கும்) ஆதீனம் (சுதந்திரம்) உள்ளவனே; நீள: பெரிய; நாகவாய்: பாம்பாய், பாம்பின் உருவத்தில்; காளக்கிரியாய்: (நஞ்சை உடையதான) பாம்பு மலையானே (சர்ப்ப கோத்திரம் எனப்படும் திருச்செங்கோடு) |
கங்காளா லீலா பாலா நீபா காம ஆமோத கன மானின்
| கங்காளா லீலா: எலும்பு மாலையை அணிந்த சிவனாரின் திருவிளையாடலால்; நீபா: கடப்ப (மாலை); நீபம்: கடம்பு; காம: விரும்பும்; ஆமோத: அதிக விருப்பமுள்ள; கன: பெருமை; மானின்: மான்போன்ற வள்ளியின்; |
தேம் ஆர் தே மா காமீ பாகீ தேசா தேசத்தவர் ஓதும்
| தேம்ஆர்: தேன் கலந்த; தே: இனிய; மா: தினை மாவு; காமீ: விரும்புபவனே; பாகீ: தகுதியுள்ளவனே; தேசா: தேசு+ஆ—ஒளியை உடையவனே; |
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே.
| சேயே: பாலனே; வேளே: தலைவனே; கோவே: அரசனே; பூவே: பூவைப் போல பொலிவும் அழகும் உள்ளவனே; |

தாமா தாம ஆலாபா லோக ஆதாரா ... மாலை அணிந்தவனே! இனிமையாக உரையாடுபவனே!

தார(ம்) தரணி ஈசா ... நீர், நிலம் முதலான பஞ்சபூதங்களுக்கும் தலைவனே!

தான ஆசாரோ பாவா பாவோ நாசா ... தானத்தை ஆசாரமாகக் கொண்டவர்களால் (கொடையைத் தம் வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்களால்) தியானிக்கப்படுபவவே! பாவங்களை நாசம் செய்பவனே!

பாசத்து அபராத யாமா யாமா தேசார் ஊடு ... பாசங்களில் சிக்கிக் கொண்டதற்கு அபராதமாக, தெற்கேயுள்ள யமலோகத்தைச் சேர்ந்தவர்களினிடையிலே,

ஆராயா ஆபத்து எனது ஆவி ஆமா காவாய் ... என்னுடைய ஆவியானது ஆராயாமல் அகப்பட்டுக்கொள்ளும் ஆபத்துக்கு உள்ளாகலாமா? காப்பாய்.

தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ ... தீயவனான அடியேன் நற்குணங்கள் வாய்க்கப்பெறாமல் சிதையில் கிடந்து அழியலாமோ?

காமா காம ஆதீனா நீள் நாகா வாய் காள கிரியாய் ... அன்பனே! அன்பர்கள் விரும்பியதை அளிக்கும் சுயஆதீனம் உள்ளவனே! பெரிய பாம்பின் உருவத்தைக் கொண்டதான காளகிரி எனப்படும் திருச்செங்கோட்டில் வீற்றிருப்பவனே!

கங்காளா லீலா பாலா நீபா ... எலும்பு மாலையை அணிவதைத் தன் லீலையாக உடைய பரமசிவனுடை பாலனே! கடப்ப மாலையை அணிந்தவனே!

காம ஆமோதக் கன மானின் ... பெருமை பொருந்தியவளும் மான்போன்றவளுமான வள்ளியுடைய,

தேம் ஆர் தே மா காமீ பாகீ ... தேன் கலக்கப்பட்டதும், இனிமை நிறைந்ததுமான தினைமாவை விரும்புபவனே! தகுதி வாய்ந்தவனே!

தேசா தேசத்தவர் ஓதும் சேயே ... ஒளி உள்ளவனே, உலகத்தோர் போற்றும் குழந்தையே,

வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. ... தலைவனே, பொலிவு உடையவனே, அரசனே, தேவனே, தேவர்களுடைய பெருமாளே.

சுருக்க உரை

எலும்புமாலையை அணியும் லீலையை (திருவிளையாடலை) உடைய ஈசனுடைய மகனே! வள்ளியம்மையின் (தினைப்புனத்திலே உள்ள) தேன் கலந்த இனிமையான தினைமாவில் விருப்பம் உள்ளவனே! ஒளி உள்ளவனே! உலகினர் போற்றுகின்ற பாலனே! வேளே! அழகும் பொலிவும் நிறைந்தவனே! தலைவனே! தேவனே! தேவர்தம் பெருமாளே!

மாலையை அணிந்தவனே! இனிமையாக உரையாடுபவனே! ஐம்பூதங்களுக்கும் தலைவனே! வள்ளல்களால் தியானிக்கப்படுபவனே! பாவங்களை நாசம் செய்பவனே! உலகத்திலே பற்றுவைத்ததன் காரணமாக யமலோகத்திலே என்னுடைய ஆவி, தடையில்லாமல் புகலாமோ? எந்தவகையான நற்குணங்களும் வாய்க்கப்பெறாமல் அடியேன் சிதையில் அழியலாமோ? (அடியேனுடைய உலகப் பற்றை அழித்து, நற்குணங்கள் வாய்க்கப்பெற்றவனாகச் செய்து அடியேனுடைய ஆவியைக் காத்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை