/

பகுதி - 252

பழனித் தலத்துக்கான பாடல் இது.  பிறவிப் பெருங்கடலைத் தாண்டி நற்கதியைப் பெற வேண்டும் பாடல். 

Updated On :25 மே 2016, 6:46 am

பழனித் தலத்துக்கான பாடல் இது.  பிறவிப் பெருங்கடலைத் தாண்டி நற்கதியைப் பெற வேண்டும் பாடல். 

இதன் சந்த அமைப்பை கவனிப்போம்.  ஒவ்வொரு நான்காம் எழுத்தும் வல்லின மெய்.  (அணிபட் என்ற முதல் சீரில் நான்காம் எழுத்து ட், டணுகித் என்ற இரண்டாம் சீரில் நான்காம் எழுத்து த்.. இவ்வாறு தொடர்கிறது.  முற்றிலும் குற்றெழுத்துகள்; கடைசிச் சீரின் மூன்றாம் எழுத்து மட்டுமே நெடில்.  இப்படிப்பட்ட அமைப்பு இதற்குக் குதிரை நடை ஓசையைக் கொடுக்கிறது.  ஒவ்வொரு அடிக்கும் ஒற்று நீக்கி 22 எழுத்துகள். 

‘பணியப் பணியப் பரமர்ப் பரவ’ என்ற நான்காம் அடியை அப்படியே பார்க்கும் போது ஒருபொருள் தொனித்தாலும் அதை முறைப்படி பிரிக்கும்போதுதான் அருணகிரியார் சொல்லவரும் பொருள் விளங்குகிறது.  இப்போது பாடலைப் பார்ப்போம்.

தனனத் தனனத் தனனத் தனனத்
          தனனத் தனனத்                 தனதான

அணிபட் டணுகித் திணிபட் டமனத்

        தவர்விட் டவிழிக்                கணையாலும்

     அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்

        தவன்விட் டமலர்க்               கணையாலும்

பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்

        பெறுமக் குணமுற்                றுயிர்மாளும்

     பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்

        பெறுதற் கருளைத்                தரவேணும்

கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்

        கனியைக் கணியுற்               றிடுவோனே

     கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்

        கருதிச் சிறைவைத்               திடுவோனே

பணியப் பணியப் பரமர்ப் பரவப்

        பரிவுற் றொருசொற்              பகர்வோனே

     பவளத் தவளக் கனகப் புரிசைப்

        பழநிக் குமரப்                    பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/265811102&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.