பகுதி - 255

முழுக்கவே அறியாமை நிறைந்த புலவனாகவும்; எளிமை கொண்ட மூடனாகவும் உள்ள நான் இப்படி வருந்தி நைந்து இரங்குவது தீராதோ?

Updated On :25 மே 2016, 6:58 am

பதச் சேதம்

சொற் பொருள்

அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடனாகி

அத்தன்: தந்தை; சொன்னம்: சொர்ணம்—பொன்; நண்ணு செல்வர்: பொருந்தியுள்ள செல்வர் (பிள்ளைகள்);

அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல்அற்று நின்னை வல்லபடி பாடி

அத்து: அளவு, வரம்பு—அத்துமீறல்:வரம்பு மீறல்; வல்லபடி பாடி: என்னால் முடிந்த அளவுக்குப் பாடி;

முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே

முத்தன்: முத்தி முதல்வன்; வல்லை: திருவல்லம் அல்லது வல்லக்கோட்டைத் தலம்;

முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ

முட்ட: முழுக்க (வயிறு முட்ட தின்றது; முட்டக் குடித்தது.. இன்னபிற); பட்டன்: பண்டிதன், புலவன்; முட்டன்: மூடன்; நைவது: நைந்து போவது, நொந்து போவது;

தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணில் உள் உதித்து மன்னு பிள்ளை முருகோனே

தித்தி—தாளக் குறிப்பு (தித்தித்தய ஒத்தப் பரிபுர—முத்தைத் தரு); தில்லை நிர்த்தர்: தில்லை நடராசர்; கண்ணில் உள் உதித்து: நெற்றிக் கண்ணிலே உதித்து; மன்னு(ம்): நிலைபெற்ற;

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய சித்ர வண்ணவல்லி அலர் சூடும்

சித்தி மன்னு: எல்லாச் சித்திகளும் நிலைத்துள்ள; சத்தி: வேல்; துன்னும்: பொருந்தும்; சித்ரவண்ண வல்லி: அழகிய திருவுருவம் கொண்ட வள்ளி; அலர்: மலர்;

பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா

வெள்ளிபத்தர்: வெள் இபத்தர்—வெள்ளை யானையை—ஐராவதத்தை—உடைய இந்திரன்; கன்னி: இந்திரன் கன்னி—தேவானை;

பச்சை வல்லி அல்லி செச்சை சென்னியுள்ள பச்சை மஞ்ஞை வல்ல பொருமாளே.

பச்சை வல்லி: வன்னி இலை; செச்சை: வெட்சிப்பூ; மஞ்ஞை: மயில்;

அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடனாகி ... தந்தை, தாயார், வீடு, வைத்திருக்கிற பொன், வெள்ளி (இவர்களோடு) அத்தை, தன்னுடைய பிள்ளைகள் அனைவரும் சூழ்ந்திருக்க;

அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி ... ஓரளவுக்குக் கற்ற கல்வி (அதனால் வரும் ஏதோ சொற்ப வருமானம்), உறவினர்கள்… என்று இன்ன வகையான துன்பங்கள் எல்லாம் நீங்கி, என்னால் முடிந்த வகையிலெல்லாம் உன்னைப் பாடி;

முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே... முக்திக்கான முதல்வன் நீயே எனவும்; திருவலம் அல்லது வல்லக்கோட்டைத் தலத்துப் பெருமான் எனவும்; வள்ளியுடைய காதற் கணவன் எனவும் என் மனத்திலே உணராமல்,

முட்ட வெண்மை* உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ ... முழுக்கவே அறியாமை நிறைந்த புலவனாகவும்; எளிமை கொண்ட மூடனாகவும் உள்ள நான் இப்படி வருந்தி நைந்து இரங்குவது தீராதோ?

(வெண்மை என்பதற்கு அறியாமை என்றும் பொருளுண்டு.)

தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணின் உள் உதித்து மன்னு பிள்ளை முருகோனே ... தித்தி என்ற தாளகதியில் நடனமாடும் தில்லை நடராசருடைய நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றி நிலைபெற்ற மகனே, முருகனே!

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய ... பலவகையான சித்திகளுக்குப் பிறப்பிடமாக விளங்கும் சக்தியாயுதத்தை—வேலை—திருக்கரத்தில் ஏந்தியவனே!

சித்ர வண்ணவல்லி அலர் சூடும் பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் ... அழகிய திருவுருவம் கொண்ட வள்ளியம்மை மலர்சூட்டிப் பணிபவனே!  பக்தர்களுடைய வாய்மை நிறைந்த வாக்கிலே (உள்ளொளியாக) விளங்கும் செம்மலே!

வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா ... வெள்ளை யானையை (ஐராவதத்தை) உடைய இந்திரனின் மகளான தேவானைப் பிராட்டியார் தழுவும் அழகான மார்பைக் கொண்டவனே!

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே. ... பச்சை நிறத்திலுள்ள வன்னி இலை, அல்லி மலர், வெட்சிப் பூ ஆகியவற்றைத் தலையில் அணிந்தவனே!  பச்சை மயிலேறி வரவல்ல பெருமாளே!

சுருக்க உரை

தித்தி என்ற தாளத்தில் தில்லையில் நடமாடும் நடராசருடைய நெற்றிக் கண்ணிலே உதித்து நிலைபெற்றவனே!  பலவகையான சித்திகளுக்குப் பிறப்பிடமாக விளங்கும் சக்தியாயுதமான வேலைக் கையில் தரித்துள்ள கரத்தினனே!  அழகிய திருவுருவத்தை உடைய வள்ளியம்மை மலர்தூவி வணங்கும் செம்மலே!  பக்தர்களுடைய வாய்மை நிறைந்த திருவாக்ல் உள்ளொளியாக விளங்குபவனே! வெள்ளை யானையை உடைய இந்திரனுடைய மகளான தேவானையம்மை தழுவிக் கொண்டிருக்கும் மார்பனே! பச்சை வன்னி இலையையும் அல்லிப் பூவையும் வெட்சி மலரையும் சூட்டிக் கொண்டிருப்பவனே!  பச்சை மயிலேறி வரவல்ல பெருமாளே!

தந்தை, தாய், வீடு, வைத்திருக்கின்ற ஓரளவு பொன், பொருள், சுற்றத்தார், மக்கள் என்று அனைவருடனும் கூடியவனாய்; இவை ஒவ்வொன்றும் விளைக்கும் துன்பங்களிலிருந்து நீங்கியவனாய்; இயன்றவகையிலெல்லாம் உனைப் பாடி, நீயே முக்தி முதல்வன் என்றும்; திருவலம் (அல்லது வல்லக்கோட்டைத்) தலத்திலுள்ள பெருமான் என்றும்; வள்ளியின் காதற் கணவன் என்றும் என்னுடைய மனத்தில் உணராதவனும்; முற்றிலும் மடமை நிறைந்த பண்டிதனும்; எளிமையும் பரிதாபமான நிலைமையையும் உடைய அடியேன் இவற்றாலெல்லாம் நைந்து நொந்து போகின்ற நிலை நீங்காதோ? (நீங்கும்படி அருளவேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.