இது திருக்கழுக்குன்றத்துக்கான பாடல். பொதுவாகத் தலத்தின் பெயர் பாடலுக்கு இடையிலே அல்லது முடிவிலோ வருவது வழக்கம். இப்பாடல் தலத்தின் பெயரோடு ஆரம்பிக்கிறது. ‘வேதவெற்பு’ எனப்படும் வேதகிரி என்ற பெயரைக் கொண்ட திருக்கழுக்குன்றம் என்று விரியும்.
ஆறு அட்சரம் என்தற்குப் பொதுவாக ‘சரவண பவ’ என்று கொள்வது வழக்கம். ‘ஓம் நமசிவாய’ என்ற ஆறெழுத்து என்று இப்பாடலில் ஐந்தெழுத்தை ஆறெழுத்தாகப் பாடுகிறார். ‘ஓர் எழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே’ என்று, ‘ஓம் நமசிவாய’ என்பதன் பொருளை சிவனுக்கே உபதேசித்தவன் எனச் சொல்கிறார்.
அடிக்கு ஒற்றொழித்து 32 எழுத்துகள் கொண்ட எளிய அமைப்பு. ஒவ்வொரு அடியிலும், மடக்கிலும் 1, 5, 9 ஆகிய எழுத்துகள் நெடில்; ஒற்று சேர்த்து 4, 9, 14 ஆகிய எழுத்துகள் வல்லொற்று. சிறிய பாடல்.
தான தத்த தான தத்த தான தத்த தனதான
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு - மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை - முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி - புயநேய
ஆத ரத்தொ டாத ரிக்க ஆன புத்தி - புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க - மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி - யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த - முநிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த - பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

