/

பகுதி - 422

சிங்கப்பூரில் ஒரு முருகன் தலமா, அங்கே அருணகிரியார் போயிருக்கிறாரா

Updated On :26 நவம்பர் 2016, 6:30 pm

இன்றைய பாடலின் தலமான ‘சிங்கை’யைப் பார்த்தால், சிங்கப்பூரில் ஒரு முருகன் தலமா, அங்கே அருணகிரியார் போயிருக்கிறாரா என்றெல்லாம் கேட்கத் தோன்றும்.  நம் ஊரிலுள்ள காங்கேயத்துக்குத்தான் அந்தப் பெயர் என்று உரையாசிரியர் தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் விளக்குகிறார்கள்.  வினைகள் அறுமாறு மயில்மீதில் ஏறிவர வேண்டும் என்று வேண்டுகின்ற பாடல்.

ஒற்று நீக்கி அடிக்கு 22 எழுத்துகள்; தொங்கல் சீர் தவிர்த்து அனைத்தும் குறில்.  ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து மெல்லொற்று.

தந்ததன தந்த தந்ததன தந்த
      தந்ததன தந்த                       தனதான

சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற
         தண்குவளை யுந்து  -   குழலாலுந்
      தண்டரள தங்க மங்க மணி கின்ற
         சண்ட விதகும்ப    -      கிரியாலும்
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
         நம்பிவிட நங்கை     -      யுடனாசை
      நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
         நன்றுமயில் துன்றி    -     வரவேணும்
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
         கந்தி கமழ்கின்ற     -      கழலோனே
      கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
         கண்டுபொரு கின்ற   -    கதிர்வேலா
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
         திண்குயம ணைந்த    -    திருமார்பா
      செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
         சிங்கையில மர்ந்த    -       பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.