பதச் சேதம் | சொற் பொருள் |
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும்
| சஞ்சரி: சஞ்சரீகம், வண்டு; முரல்கின்ற: ஒலிக்கின்ற, ரீங்கரிக்கின்ற; தண்குவளை: குளிர்ச்சியான குவளை; உந்து: பொருந்திய; குழலாலும்: கூந்தலாலும்; |
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும்
| தண் தரளம்: குளிர்ச்சியான முத்து; சண்டவித: வலிமை பொருந்திய; கும்பகிரி: குடம் போன்றதும் மலையை ஒத்ததுமான மார்பகம்; |
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை
| நஞ்சவினை: நஞ்சு கலந்த செயல்; |
நண்பு உறு எனை இன்று நன்றுஇல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும்
| நன்றில்வினை: நன்றுஇல் வினை, நல்லதற்ற செயல்; துன்றி: பொருந்தி; |
கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே
| கஞ்ச மலர்: தாமரை மலர்; கந்தி: கந்தமுள்ளது கந்தி, நறுமணம்; |
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா
| கன்றிடு: கன்றிப் போன, வாடிய; கணங்கள்: (நாய், நரி, காக்கை, கழுகு முதலான) கூட்டங்கள்; பொருகின்ற: போரிடுகின்ற; |
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா
| செஞ்சொல்: செம்மையான சொல், பாடல்; குயம்: மார்பகம்; திருமார்பு: அழகிய மார்பு; |
செண்பகம் இலங்கு இன் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே.
|
|
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும்... வண்டுகள் மகிழ்ச்சியுடன் ஒலித்து ரீங்கரிக்கின்ற குளிர்ச்சியான குவளை மலரைச் சூடியுள்ள கூந்தலைக் கொண்டும்;
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும்... குளிர்ச்சியான முத்துக்களாலான மாலையையும்; தங்க நகையையும் அணிந்திருப்பதும்; வலிமை கொண்டதும்; குடத்தையும் மலையையும் ஒத்த மார்பகங்களைக் கொண்டும்;
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட... நஞ்சு கலந்ததான செயலை மேற்கொண்டு, ‘நீங்களே தஞ்சம்’ என்று சொன்னபடி வந்து, நான் நம்பும்படியாக நடிக்கின்ற,
நங்கையுடன் ஆசை நண்பு உறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும்... பெண்ணிடத்தில் ஆசைகொண்டு நட்பு வைக்கின்ற என்னை, இன்றே, இப்போதே என் தகாத செயல்களை அழித்து, நன்மையைத் தருவதான மயிலின்மேல் பொருந்தி அமர்ந்த நிலையில் (என் முன்னே) வரவேண்டும்.
கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே...
தாமரைப் பூ, கொன்றைப் பூ, தும்பை, மகிழ மலர் இவையெல்லாம் மிகுதியாகக் கலந்து மணம்வீசுகின்ற திருவடியை உடையவனே!
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா... வாடி, உலர்ந்து, அழுகும் பிணங்களைத் தின்னும் (நாய், நரி, கழுகு, காக்கை முதலான) கூட்டங்கள் பார்க்கும்படியாகப் போரிடுபவனே! ஒளிவீசும் வேலை ஏந்தியவனே!
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா... செவ்விய சொற்களால் புனையப்பட்ட பாமாலையை அணிகின்ற எங்களுடைய குறப்பெண்ணான வள்ளியின் வலிய திருமார்பைத் தழுவியுள்ள திருமார்பனே!
செண்பகம் இலங்கும் இன் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே.... செண்பகப் பூக்கள் நிறைந்து விளங்கும் இனிய சோலைகள் திகழ்கின்ற சிங்கை எனப்படும் காங்கேயத் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
தாமரை, கொன்றை, தும்பை, மகிழம் போன்ற பல மலர்கள் நிறைந்து மணம்வீசும் திருவடியை உடையவனே! உலர்ந்தும் அழுகியும் கிடக்கும் பிணங்களைத் தின்னும் நாய், நரி, காகம், கழுகு முதலான கூட்டங்கள் காணும்படியாகப் போர்புரியும் கதிர்வேலனே! செம்மையான சொற்களால் தொடுக்கப்பட்ட பாமாலையைப் புனைபவளும்; எங்கள் குறமங்கையுமான வள்ளியம்மையின் மார்பகத்தைப் பொருந்தத் தழுவிய திருமார்பனே! செண்பக மலர்கள் நிறைந்து விளங்குகின்ற இனிய சோலைகள் நிறைந்திருக்கின்ற சிங்கை எனப்படும் காங்கேயத் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
வண்டு மகிழ்ந்து நின்று ரீங்கரிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய குவளை மலரைச் சூடிய கூந்தலுடனும்; குளிர்ந்த முத்து மாலையும் பொன் ஆபரணங்களையும் அணிந்துள்ளதும்; குடத்தையும் மலையையும் ஒத்ததுமான மார்பகங்களுடனும்; நச்சுத் தன்மையுள்ள செயலைக் கடைப்பிடித்து, ‘நீங்களே தஞ்சம்’ என்று நான் நம்பும்படியாக நடிக்கின்ற பெண்ணின் மீது ஆசையையும் நட்பையும் வைக்கின்ற என் தீச்செயல்களை அழித்து, இன்றே, இப்போதே நன்மையை விளைப்பதான மயிலின்மேல் ஏறி என் முன்னே வரவேண்டும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

