சிதம்பரத்துக்குத் தென்மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், தற்போது ஸ்ரீமுஷ்ணம் என்று அழைக்கப்படும் திருமுட்டம் தலத்துக்கான பாடல் இது. பற்பலவிதமான முத்துமாலைகளை அணிந்து, இச்சா சக்தியான வள்ளியம்மையோடும் பக்தர்கூட்டத்தோடும் காட்சி தந்தருள வேண்டும் என்று கோருகின்ற பாடல்.
ஒற்றொழித்து அடிக்கு 22 எழுத்துகள்; 5, 11, 17 ஆகிய எழுத்துகள் நெடில், மற்றவை குறில்; ஒற்று சேர்த்து 4, 11, 18 ஆகியவை வல்லொற்றுகள். பாடலைப் பார்ப்போம்.
தனதத்த தான தனதத்த தான
தனதத்த தான தனதான
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை மலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை யரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவ அடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
மடிமைக்கு ழாமொ டருள்வாயே
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மழலைச்சொ லாயி யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனு முருகோனே
செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
திருமுத்தி மாதின் மணவாளா
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

