மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 524

இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது

Updated On :3 ஏப்ரல் 2017, 6:30 pm

யமன் எதிர்ப்படுகின்ற சமயத்திலே மயிலில் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்தருள வேண்டும் என்று கோரும் இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 43 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  இப்பாடலில் ஒவ்வொரு அடியிலும் மடக்கிலும் பயிலும் முதல் இருசீர்கள் சற்று நிதானமானவையாகவும் அடுத்த இருசீர்கள் வேகமாகவும் பாய்வதைக் காணலாம்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் இரண்டெழுத்துகளைக் கொண்டவை; இரண்டாவது எழுத்தாக (கணக்கில் சேராத) மெல்லொற்று பயில்கிறது.  இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளைக் கொண்டவை; மூன்று, நான்கு; ஏழு, எட்டு; பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சீர்கள் நான்கு நான்கு குற்றெழுத்துகளால் அமைந்தவை.

தந்த தானன தனதன தனதன 
         தந்த தானன தனதன தனதன 
         தந்த தானன தனதன தனதன      -    தனதான

பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி 
         குஞ்சி கூர்விட மதர் விழி பிலவக 
         பங்க வாண்முக முடுகிய நெடுகிய      திரிசூலம் 
      பந்த பாசமு மருவிய கரதல 
         மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு 
         பண்பி லாதொறு பகடது முதுகினில் - யமராஜன்

அஞ்ச வேவரு மவதர மதிலொரு
         தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும் 
         அன்பி னாலுன தடிபுக ழடிமையெ      னெதிரேநீ 
      அண்ட கோளகை வெடிபட இடிபட 
         எண்டி சாமுக மடமட நடமிடும் 
         அந்தி மோகர மயிலினி லியலுடன்  -   வரவேணும்

மஞ்சு போல்வள ரளகமு மிளகிய 
         ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென 
         வந்த தூயவெண் முறுவலு மிருகுழை  யளவோடும் 
      மன்றல் வாரிச நயனமு மழகிய 
         குன்ற வாணர்த மடமகள் தடமுலை 
         மந்த ராசல மிசைதுயி லழகிய   -     மணவாளா

செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை 
         விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து 
         திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் மகமேரு 
      செண்டு மோதின ரரசரு ளதிபதி 
         தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு 
         செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் -  பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.